அவங்க வரும் போது இந்த மைதானமே அதிரனும்! லார்ட்ஸில் கோலி போட்ட திட்டத்தை உடைத்த அஸ்வின்
இந்திய அணியின் சுழற்பந்து விச்சாளரான அஸ்வின், இரண்டாவது டெஸ்ட் போட்டியில் நடந்த சில சுவாரஸ்யமான சம்பவங்களை பகிர்ந்துள்ளார்.
இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கிடையே லார்ட்சில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது.
குறிப்பாக இப்போட்டியில் இந்திய அணியின் வெற்றிக்கு மிக முக்கிய காரணமான ஷமி-பும்ரா ஜோடி 9-வது விக்கெட்டிற்கு 89 ஓட்டங்கள் சேர்த்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தது.
அதுமட்டுமின்றி பவுலிங்கிலும் இவர்கள் மிரட்டினர். இந்நிலையில் இந்த போட்டியின் போது நடந்த சில சுவாரஸ்மான சம்பவங்களை அணியில் இருக்கும் ரவிச்சந்திரன் அஸ்வின் பகிர்ந்துள்ளார்.
A partnership to remember for ages for @Jaspritbumrah93 & @MdShami11 on the field and a rousing welcome back to the dressing room from #TeamIndia.
— BCCI (@BCCI) August 16, 2021
What a moment this at Lord's ???#ENGvIND pic.twitter.com/biRa32CDTt
அதில், பும்ரா மற்றும் ஷமி உணவு இடைவெளிக்கு திரும்புகின்றனர் என்பது தெரிந்தவுடன், கோஹ்லி உடனடியாக எங்களிடம் வந்து, அனைவரும் கீழே சென்று அவர்களுக்கு உற்சாக வரவேற்பு வழங்க வேண்டும்.
நாம் எழுப்பும் சத்தம் இன்னும் பல வருடங்களுக்கு லார்ட்ஸ் மைதானத்தில் ஒலித்துக் கொண்டே இருக்க வேண்டும். அப்படி ஒரு தாக்கத்தை ஏற்படுத்துங்கள் என்று கூறினார்.
அது போன்றே நாங்கள் அவர்கள் வந்த போது கைதட்டி உற்சாக வரவேற்பைக் கொடுத்தோம் என்று கூறியுள்ளார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது