உங்களை விட எங்களுக்கு வேதனை அதிகம்! உலகக்கோப்பை தோல்வி குறித்து அஸ்வின் கருத்து
உலகக்கோப்பை தோல்வி குறித்த விமர்சனங்களுக்கு ரவிச்சந்திரன் அஸ்வின் பதிலளித்துள்ளார்.
300 மடங்கு வேதனை
டி20 உலகக்கோப்பையில் இந்திய அணி அரையிறுதியில் தோல்வி அடைந்து வெளியேறியது ரசிகர்களுக்கு அதிர்ச்சியையும், கோபத்தையும் ஏற்படுத்தியது.
அதன் விளைவாக இந்திய அணி மீது ரசிகர்கள் இடையே கடுமையான விமர்சனங்கள் எழுந்தன. இந்த நிலையில் தமிழக வீரர் அஸ்வின் சமீபத்திய வீடியோ ஒன்றில் தோல்வி குறித்து கருத்து தெரிவித்தார்.
@Getty Images
அவர் கூறுகையில், 'இந்திய அணி கோப்பையை வெல்லவில்லை என்பதால் ரசிகர்கள் சோகத்தில் உள்ளனர். அதனை ஒப்புக் கொள்கிறேன். அதற்காக எந்த காரணத்தையும் நாங்கள் கூற முடியாது.
ஆனால் நாம் கடந்து செல்ல வேண்டும் தானே. அரையிறுதி சுற்றுக்கு செல்வதையே ஒரு சாதனையாக பார்க்கலாம். ரசிகர்களாகிய உங்களை விட, விளையாடிய எங்களுக்கு 200-300 மடங்கு அதிகமாக வேதனை உள்ளது' என தெரிவித்தார்.
@AFP