சும்மா இருப்பது கடினம்தான்.,இரவு தூங்கும்போது ஞாபகம் வரும்: தமிழ்நாடு திரும்பிய அஸ்வின்
சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற அஸ்வின் சென்னைக்கு திரும்பினார்.
வரவேற்பு
தமிழக வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் ஓய்வை அறிவித்ததைத் தொடர்ந்து, அவுஸ்திரேலியாவில் இருந்து சிங்கப்பூர் வழியாக சென்னை திரும்பினார்.
அவருக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் ஓய்வு குறித்து பேசினார்.
எனது பயணம்
அஸ்வின் கூறுகையில், "இரவு தூங்கும்போது விளையாடிய போட்டிகளில் விக்கெட் வீழ்த்தியது, ஓட்டங்கள் எடுத்தது ஞாபகம் வரும்; ஆனால் கடந்த 2 ஆண்டுகளாக அப்படி ஒன்றும் ஞாபகம் வரவில்லை.. நான் இனி அடுத்த பாதைக்கு செல்ல வேண்டும் என்பதற்கான ஒரு தெளிவான அறிகுறி அது.
இவ்வளவு வரவேற்பு இருக்கும் என்று எதிர்பார்க்கவில்லை. அடுத்த பயணத்தை இனி தொடங்க வேண்டும். இனி சிறிது நாட்களுக்கு எதுவும் செய்யாமல் சும்மா இருக்க வேண்டும்; சும்மா இருப்பது கடினம்தான். கிரிக்கெட்டில் எனது பயணம் தொடர்ந்து இருக்கும். அடுத்த பயணத்தை இனிதாக தொடங்க வேண்டும்" என தெரிவித்தார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |