மக்கள் மனதில் இருந்து அந்த வார்த்தையை அழிக்க..தமிழக வீரர் அஸ்வின்
இந்திய ஜெர்சியை பெருமையுடன் அணிந்ததில் இருந்தே அதிக சிந்தனை என்பது என்னைப் பின்தொடர்ந்த ஒரு கருத்து, குறித்து தான் சிந்தித்து வருவதாக தமிழக வீரர் அஸ்வின் தெரிவித்துள்ளார்.
டெஸ்ட் தொடரை கைப்பற்றிய இந்திய அணி
வங்கதேசத்திற்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்திய அணி 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. வங்கதேசம் நிர்ணயித்த 145 ஓட்டங்கள் வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணி எதிர்பாராத விதமாக விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது.
ஆனால், தமிழக வீரர் அஸ்வின் அபார ஆட்டத்தினால் இந்திய அணி வெற்றி பெற்றது. அவருக்கு உறுதுணையாக ஷ்ரேயாஸ் ஐயர் பார்ட்னர்ஷிப் கொடுத்தார்.
@AFP
அஸ்வினின் ட்வீட்
இந்த நிலையில், தனது ஒவ்வொரு பயணமும் சிறப்பு வாய்ந்தது என ட்வீட் செய்துள்ளார். அவரது பதிவில், 'நான் இந்திய ஜெர்சியை பெருமையுடன் அணிந்ததில் இருந்தே அதிக சிந்தனை என்பது என்னைப் பின்தொடர்ந்த ஒரு கருத்து.
@Twitter/@ICC
நான் இப்போது சிறிது நேரம் அதைப் பற்றி சிந்தித்து வருகிறேன். மக்கள் மனதில் இருந்து அந்த வார்த்தையை அழிக்க ஒரு PR பயிற்சியை நான் தீவிரமாக பரிசீலித்திருக்க வேண்டும் என்று நம்புகிறேன். ஒவ்வொருவரின் பயணமும் சிறப்பு வாய்ந்தது' என தெரிவித்துள்ளார்.
“Overthinking” is a perception that has followed me ever since I wore the Indian jersey with pride. I have pondered about it for a while now and believe I should have seriously considered a PR exercise to erase that word out of peoples minds. Every person’s journey is special
— Ashwin ?? (@ashwinravi99) December 25, 2022