பந்துவீச்சாளர்களுக்காக குரல் கொடுத்த அஸ்வின்! சொன்ன புதிய யோசனை
தமிழக வீரர் அஸ்வின் எல்.பி.டபள்யூ முறையில் திருத்தம் கொண்டு வர வேண்டும் என புதிய யோசனை கூறியுள்ளார்.
கிரிக்கெட்டில் தற்போது உள்ள எல்.பி.டபள்யூ விக்கெட் முறையானது சில சமயங்களில் பந்துவீச்சாளர்களுக்கு அதிருப்தி ஏற்படுத்தும் வகையில் அமைந்து விடுகிறது.
துடுப்பாட்ட வீரர் ரெவெர்ஸ் ஸ்வீப் ஷாட் விளையாடும்போது, பந்து காலில் பட்டு எல்.பி.டபள்யூ கேட்டால் பெரும்பாலும் துடுப்பாட்ட வீரருக்கு சாதமாகவே தீர்ப்பு கொடுக்கப்படுகிறது.
இதுதொடர்பாக கருத்து தெரிவித்துள்ள அஸ்வின், ஐசிசிக்கு கோரிக்கை ஒன்றை வைத்துள்ளார். அவர் கூறுகையில், 'பந்துவீச்சாளர்கள் ஓவர் வீசும்போது இடதுகையில் வீசுகிறோமா? வலதுகையில் வீசுகிறோமா எனக் கூறவில்லை என்றால் நோ-பால் கொடுக்கிறார்கள். ஆனால் வலதுகை துடுப்பாட்ட வீரர் திடீரென இடதுபுறம் திரும்பி நின்று ஆடினால் அவரை இடதுகை வீரராக கருதுவதில்லை.
இனி அவ்வாறு முடிவு செய்ய வேண்டும். அதேபோல் ஸ்டம்ப் லைனின் மையப்பகுதி மற்றும் லெக் ஸ்டம்பிற்கு வெளியில் என எங்கு பட்டாலும் எல்.பி.டபள்யூ அவுட் கொடுக்க வேண்டும்' என தெரிவித்துள்ளார்.
PC: BCCI
ஏற்கனவே மன்கட் முறையில் அஸ்வின் வீரர்களை ஆட்டமிழக்க செய்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. ஆனாலும் ஐசிசி விதிகளின்படி அது சரிதான் என்று கூறப்பட்டது குறிப்பிடத்தக்கது.
PC: AFP