இந்த ஒரு வீரர் CSK அணியை வீழ்த்த போதும்: மும்பை இந்தியன்ஸுடனான போட்டி குறித்து அஸ்வின் கருத்து
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வீழ்த்த மும்பை அணியின் துருப்புச் சீட்டாக ஜஸ்பிரித் பும்ரா இருப்பார் என தமிழக வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் தெரிவித்துள்ளார்.
சென்னை - மும்பை
மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி இன்று நடைபெற உள்ளது.
ஐபிஎல் கிரிக்கெட்டில் இந்த இரு அணிகளும் பரம எதிரிகள் என்று கருதப்படுவதால், இப்போட்டிக்கு ரசிகர்கள் இடையே பாரிய அளவில் எதிர்பார்ப்பு உள்ளது.
RCB அணிக்கு எதிரான போட்டியில் பும்ரா 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அதிர வைத்தார். எனவே இன்றைய போட்டியிலும் அவரது தாக்குதல் இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
அஸ்வின் கருத்து
இந்த நிலையில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் ஆல்ரவுண்டர் வீரர் அஸ்வின் இன்றைய போட்டி குறித்து கூறுகையில், ''இரவில் மின்சாரம் தடைபடும்போதும் நாம் அவசர விளக்கை பயன்படுத்துவோம். அதேபோல் பும்ராவை மும்பை இந்தியன்ஸ் Emergency Light ஆக பயன்படுத்துகிறது.
எனவே அவர் விக்கெட் எடுத்தால் அது Powerplayயில் மும்பைக்கு மிகப்பாரிய Boost ஆக இருக்கும். அதன் பின் இரண்டாவது பகுதியில் தேவைப்படும்போதோ அல்லது ஓட்டங்களை நிறுத்துவதற்கான சூழ்நிலை உருவாகும்போதோ அல்லது மற்ற பந்துவீச்சாளர் ஓட்டங்களை வாரி வழங்குவதோ மும்பை அவரை பயன்படுத்துகிறது.
கடந்த போட்டி முடிந்ததும் நான் பும்ராவிடம் பேசினேன். அப்போது வான்கடே மைதானம் பந்துவீச்சாளர்களுக்கு போர்க்களம் போன்றது என பும்ரா என்னிடம் கூறினார்.
அந்த மைதானத்தில் மும்பை அணியினர் 250 ஓட்டங்களை பயிற்சி போட்டிகளில் சுலபமாக Chasing செய்கிறார்கள். அங்கு 250 ஓட்டங்களை Chasing செய்வது சாதாரணமானது. எனவே அந்த மைதானத்தைப் பற்றி இதை நாம் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்'' என தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |