2022 ஐபிஎல் தொடரில் இந்த அணிக்காக விளையாட விரும்புகிறேன்! வெளிப்படையாக கூறிய அஸ்வின்
2022 ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாட விரும்புவதாக அஸ்வின் தெரிவித்துள்ளார்.
டெல்லி அணியால் விடுவிக்கப்பட்டுள்ள அஸ்வின், 2022 ஐபிஎல் மெகா ஏலத்தில் பங்கேற்க உள்ளார்.
அஸ்வின் 200க முதல் 2015 வரை சென்னை அணிக்காக 98 இன்னிங்ஸில் விளையாடி 90 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தனது யூடியூப் சேனில் ரசிகர் ஒருவரின் கேள்விக்கு பதிலளித்த அஸ்வின் கூறியதாவது, சிஎஸ்கே அணி என் இதயத்திற்கு நெருக்கமானது, என்னைப் பொறுத்தவரை சிஎஸ்கே ஒரு பள்ளி போன்றது.
அங்குதான் நான் Pre KG, LKG, UKG, ஆரம்பப் பள்ளிகளில் சேர்ந்து, நடுநிலைப் பள்ளியை முடித்தேன், பின்னர் உயர்நிலைப் பள்ளி தொடங்கி 10 ஆம் வகுப்பு வாரியத் தேர்வுகளை முடித்து, வேறு பள்ளிக்குச் சென்றேன்.
நான் எனது 11வது மற்றும் 12வது இரண்டு வருடங்கள், வெளியில் படித்தேன். பிறகு ஜூனியர் கல்லூரியில் ஓரிரு வருடங்கள் படித்தேன்.
ஆனால் எல்லாவற்றையும் முடித்த பிறகு, கண்டிப்பாக ஒருவர் வீட்டிற்கு வர வேண்டும், இல்லையா? அதனால் நான் கூட வீட்டிற்கு (சிஎஸ்கே) திரும்பி வர விரும்புகிறேன், ஆனால் இது அனைத்தும் ஏலத்தைப் பொறுத்தது.
ஏலத்தில் என்ன நடக்கப்போகிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம். ஆனால் ஒரு கிரிக்கெட் வீரராக, எந்த அணிக்கு சென்றாலும் எனது முழு திறமையையும் வெளிப்படுத்துவேன் என அஸ்வின் தெரிவித்துள்ளார்.