தோனி, தினேஷ் கார்த்திக், சாஹா.. மூவரில் இவர் தான் சிறந்த விக்கெட் கீப்பர்! காரணத்துடன் கூறிய அஸ்வின்
தோனி, தினேஷ் கார்த்திக், சாஹா மூவரில் யார் சுழற் பந்து வீச்சிக்கு எதிராக சிறந்த விக்கெட் கீப்பர் என்பதை இந்திய சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் தேர்ந்தேடுத்துள்ளார்.
ட்விட்டரில் ரசிகர்கள் பலர் அஸ்வினிடம் கேள்வி எழுப்பிய நிலையில், அதில் 40 கேள்விகளை தேர்வு செய்த அஸ்வின், அதற்கு பதிலளித்து தனது யூடியூப் சேனலில் வெளியிட்டுள்ளார்.
அதில், தோனி, தினேஷ் கார்த்திக் மற்றும் சாஹா இவர்கள் மூவரில் யார் சுழற் பந்து வீச்சிக்கு எதிராக சிறந்த விக்கெட் கீப்பர் என ரசிகர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு அஸ்வின் பதிலளித்துள்ளார்.
3 வீரர்களின் திறமையையும் பாராட்டிய அஸ்வின், தோனி பல கடினமான கேட்ச்களை மிக சுலபமாக பிடித்துள்ளார் என கூறினார்.
தமிழ்நாட்டில் தினேஷ் கார்த்திக் உடன் பல கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி உள்ளேன்.
ஆனால், மூவரில் ஒருவரை தேர்வு செய்ய வேண்டுமென்றால், பல கடினமான விக்கெட்டுகளை மிக சுலபமாக எடுத்த விக்கெட் கீப்பர் தோனி தான்.
ஸ்டம்பிங் அல்லது ரன்-அவுட் கேட்ச்கள் என எதையும் அவர் தவறவிடுவதை நான் பார்த்ததில்லை. சுழற்பந்து வீச்சுக்கு எதிராக மிகவும் விதிவிலக்கான கீப்பர்களில் ஒருவர் தோனி என அஸ்வின் தெரிவித்துள்ளார்.