மிகவும் ஏமாற்றத்துடன், வெறுப்பில் தன்னந் தனியாக உட்கார்ந்திருக்கும் அஸ்வின்! கலங்கும் ரசிகர்கள்: வைரலாகும் புகைப்படம்
இங்கிலாந்து அணிக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில், மிகவும் ஏமாற்றத்துடன் அஸ்வின் தனியாக உட்கார்ந்திருக்கும் புகைப்படம் வெளியாகி வைரலாகி வருகிறது.
கோஹ்லி தலைமையிலான இந்திய அணி, அங்கு ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.
இதில் இரு அணிகளுக்கிடையே நடைபெற்று முடிந்த மூன்று டெஸ்ட் போட்டிகளில், இரு அணிகளுமே தலா 1-1 என்று வெற்றியுடன் சமநிலையில் உள்ளன.
இதையடுத்து இரு அணிகளுக்கிடையேயான நான்காவது டெஸ்ட் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், இந்த தொடரில் இதுவரை அஸ்வினை, கோஹ்லி எடுக்கவில்லை, அது என்ன காரணம் என்றே தெரியவில்லை. இதனால் கோலியை முன்னாள் வீரர்கள் உட்பட ரசிகர்கள் கடுமையாக வசைபாடி வருகின்றனர்.
தற்போது நடைபெற்று வரும் நான்காவது டெஸ்ட் போட்டியின் நேற்றைய நான்காம் நாள் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக மாறியுள்ளது. இதனால் அஸ்வின் இருந்திருந்தால், இந்தியா ஜெயிப்பதற்கு அதிகம் வாய்ப்பு உள்ளது.
இதையடுத்து அஸ்வின் நேற்று இந்திய வீரர்களுடன் சேர்ந்து உட்காரமால் தனியாக மிகவும் ஏக்கத்துடன் உட்கார்ந்திருந்தார்.
World No.2 bowler picked a 6-fer in the same ground a month back, now sitting alone in the stands watching his team struggling because of one egoistic captain left him out during the team selection. #INDvsEND #Ashwin pic.twitter.com/hUY0SKGjTD
— Here's Hari (@HariharanSivak6) September 6, 2021
இது தொடர்பான வீடியோ தொடர்ந்து ஒளிபரப்பாகிக் கொண்டிருந்த பின்னரே அவர், மீண்டும் அணியினர் இருக்கும் பகுதிக்கு சென்று அமர்ந்தார்.
இந்த புகைப்படம் மற்றும் வீடியோ இணையத்தில் வெளியாகி அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது.