இவரிடமிருந்து தப்பிப்பது மிகவும் கடினம்! தமிழக வீரரை புகழ்ந்த நியூசிலாந்து ஓபனிங் பேட்ஸ்மேன்
இந்திய சுழற்பந்து வீச்சாளர் அஸ்வினை எதிர்கொள்வது மிகவும் கடினம் என நியூசிலாந்து ஓபனிங் வீரர் மார்ட்டின் குப்தில் புகழ்ந்துள்ளார்.
இந்திய டி20 அணிக்கு திரும்பிய அஸ்வின், இதுவரை விளையாடி 4 போட்டிகளில் 5.375 எகனாமியுடன் 8 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.
நேற்று நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் 4 ஓவர்களை வீசிய அஸ்வின், 23 ரன்கள் கொடுத்து Chapman, GD Phillips விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
இந்தியா உடனான தோல்விக்கு பின் செய்தியாளர் கூட்டத்தில் பேசிய நியூசிலாந்து ஓபனிங் பேட்ஸ்மேன் மார்ட்டின் குப்தில், அஸ்வினை பந்து வீச்சு திறனை புகழ்ந்துள்ளார்.
குப்தில் கூறியதாவது, அஸ்வின் ஒரு தந்திரமான பந்துவீச்சாளர், அவர் நேர்த்தியான லைன் மற்றும் லென்த்-ல் பந்து வீசும் திறன் கொண்டவர்.
மேலும் அவர் மோசமான பந்துகளை வீச மாட்டார். இதுவரை அவர் எனக்கு மோசமான பந்துகளை வீசியதாக எனக்கு நினைவில் இல்லை.
அவரிடமிருந்து தப்பிப்பது மிகவும் கடினம், அவருடைய வேக மாற்றம் மிகவும் நுட்பமானது என்பது அனைவருக்கும் தெரிந்ததே என குப்தில் புகழ்ந்தார்.