களத்தில் அஸ்வினை சுத்தி போட்டு சண்டைக்கு இழுத்து வார்த்தை தகராறு செய்த சவூதி - மோர்கன்! பரபரப்பான ரசிகர்கள்... வைரல் வீடியோ
ஐபிஎல் தொடரில் டெல்லி - கொல்கத்தா அணிகளுக்கு இடையிலான போட்டியின் போது அஸ்வின் - சவுதி வார்த்தை தகராறில் ஈடுபட்ட வீடியோ வைரலாகியுள்ளது.
நடப்பு ஐபிஎல் தொடரின் 41-வது லீக் போட்டி ஷார்ஜா மைதானத்தில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் முதலில் விளையாடிய டெல்லி அணியானது 127 ரன்களை மட்டுமே குவிக்க அடுத்ததாக விளையாடிய கொல்கத்தா அணி 18.2 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து வெற்றி இலக்கைத் தொட்டது.
இதன் காரணமாக 3 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தா அணி ஒரு திரில்லிங்கான வெற்றியைப் பெற்றது. இந்நிலையில் இந்த போட்டியில் அஸ்வின் 19வது ஓவரின் முதல் பந்தில் சிக்ஸ் அடிக்க முயன்று டிம் சவுதி பந்தில் ஆட்டமிழந்து வெளியேறினார்.
Ashwin and Tim Southee ?
— Kart Sanaik (@KartikS25864857) September 28, 2021
What happened there??#Ashwin #TimSouthee #DCvKKR #IPL2021 pic.twitter.com/GXjQZE5Yj3
அப்போது யாரும் எதிர்பாராத வகையில் அஸ்வின் மற்றும் சவூதி ஆகியோர் கடுமையான வார்த்தை தகராறில் ஈடுபட்டனர். அஸ்வின் ஆட்டம் இழந்ததும் அவரை நோக்கி டிம் சவூதி ஏதோ தகாத வார்த்தைகளால் கூறியதாக தெரிகிறது.
அதனால் ஆவேசமான அஸ்வின் அவரிடம் பேசிக் கொண்டே சென்றார். பின்னர் கொல்கத்தா அணியின் கேப்டன் மோர்கனும் அஸ்வினை நோக்கி ஏதோ பேசியபடி வந்தார்.
இதனால் பொறுமை இழந்த அஸ்வின் அவர்கள் இருவரையும் நோக்கி சரமாரியாக வார்த்தைகளை உதித்தார். உடனே கொல்கத்தா அணியில் இருக்கும் தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் அஸ்வினை சமாதானம் செய்து பின்னர் பெவிலியனுக்கு திருப்பி அனுப்பினார்.