சூப்பர்மேன் போல பாய்ந்து கேட்ச் பிடித்த அஸ்வின்! வியந்து போன ரசிகர்கள்... வைரலாகும் வீடியோ
ஐபிஎல் தொடரில் பெங்களூர் அணிக்கு எதிரான போட்டியில் அஸ்வின் அபார கேட்சை ஒன்றை பிடித்து அசத்தினார்.
ஐபிஎல் குவாலிபையர் 2 ஆட்டத்தில் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதிய நிலையில் ராஜஸ்தான் அணி வெற்றி பெற்றது.
இப்போட்டியில் பெங்களூர் அணியின் நட்சத்திர வீரர் டுபிளஸிஸ் 25 ரன்கள் எடுத்து ஆடி கொண்டிருந்தார். அப்போது மெக்காய் வீசிய பந்தை அடிக்க முயன்று, அது எட்ஜ் ஆகி ஷாட் தெர்த் மேன் பகுதியில் நின்ற அஸ்வினிடம் சென்றது.
இதையடுத்து சூப்பர் மேன் போல் பாய்ந்து அஸ்வின் கேட்ச் பிடித்தார். இதனால் டுபிளஸிஸ் அவுட்டாகினார்.
இது ஆட்டத்தில் முக்கிய திருப்புமுனையாக இருந்தது. அஸ்வின் பிடித்த இந்த கேட்ச் ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியது.
இது தொடர்பான வீடியோ வைரலாகியுள்ளது.