முக்கிய தலைகளை தட்டித் தூக்கிய தமிழக வீரர்கள்! அனல் பறக்கும் புனே டெஸ்ட்
நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தமிழக வீரர் ரவி அஸ்வின் 3 விக்கெட்டுகளை சாய்த்தார்.
இரண்டாவது டெஸ்ட்
புனேயில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று தொடங்கியுள்ளது.
நாணய சுழற்சியில் வென்ற நியூசிலாந்து அணி முதலில் களமிறங்கியது. முதல் டெஸ்டில் பெரிதளவில் சோபிக்காத தமிழக வீரர் அஸ்வின் (Ashwin) இம்முறை தனது சுழற்பந்துவீச்சில் மிரட்டினார்.
நியூசிலாந்து அணித்தலைவர் டாம் லாதமை (15) lbwயில் வெளியேற்றிய அஸ்வின், அடுத்து வந்த வில் யங்கையும் (18) ஆட்டமிழக்க செய்தார்.
T. I. M. B. E. R! ?
— BCCI (@BCCI) October 24, 2024
Cracker of a ball! ? ?
Washington Sundar with a breakthrough ? ?
Live ▶️ https://t.co/YVjSnKCtlI #TeamIndia | #INDvNZ | @Sundarwashi5 | @IDFCFIRSTBank pic.twitter.com/OC8VS7fnwT
அஸ்வின்-சுந்தர்
பின்னர் அரைசதம் அடித்த டெவோன் கான்வே 76 ஓட்டங்களில் அஸ்வின் பந்துவீச்சில் ரிஷாப் பண்ட்டிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.
இந்திய அணிக்கு நெருக்கடி கொடுத்த ரச்சின் ரவீந்திராவை (Rachin Ravindra) 65 ஓட்டங்களில் மற்றொரு தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் போல்டாக்கினார்.
அதேபோல் வாஷிங்டன் சுந்தரின் ஓவரில் டாம் பிளெண்டல் (3) மற்றும் டேர்ல் மிட்செல் (18) இருவரும் கிளீன் போல்டு ஆகினர்.
தமிழக சுழற்பந்து வீச்சாளர்களின் மிரட்டல் பந்துவீச்சில் நியூசிலாந்து அணி 6 முக்கிய விக்கெட்டுகளை இழந்து ஆடி வருகிறது.
மேலும் கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டு செய்திகளை பார்வையிட நமது WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |