ஒரே போட்டியில் இரண்டு சாதனைகள் படைத்த அஸ்வின்!
ரவிச்சந்திரன் அஸ்வின் ஐபிஎல் கிரிக்கெட்டில் 150 விக்கெட்டுகளை வீழ்த்திய இரண்டாவது ஆஃப் ஸ்பின் பந்துவீச்சாளர் என்ற சாதனையை படைத்துள்ளார்.
ராயல்ஸ் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிராக நடந்த ஐபிஎல் லீக் போட்டியில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர் அஸ்வின் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதன் மூலம் ஐபிஎல் கிரிக்கெட்டில் 150 விக்கெட்டுகள் மைல்கல்லை அவர் எட்டினார்.
மேலும், 150 விக்கெட்டுகளை வீழ்த்திய இரண்டாவது ஆஃப் ஸ்பின் பந்துவீச்சாளர் என்ற சாதனையையும் அவர் படைத்துள்ளார். இதற்கு முன்பு ஹர்பஜன் சிங் இந்த சாதனையை செய்திருந்தார்.
அத்துடன் 150 விக்கெட்டுகளை ஐபிஎல் கிரிக்கெட்டில் சாய்த்த 6வது இந்திய பந்துவீச்சாளர் என்ற சாதனையையும் அஸ்வின் படைத்துள்ளார்.
ஐபிஎல்-யில் 150 விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய பந்துவீச்சாளர்கள்:
- மிஸ்ரா (166)
- சாஹல் (157)
- சாவ்லா (157)
- அஸ்வின் (152)
- புவனேஷ்வர்குமார் (151)
- ஹர்பஜன் சிங் (150)