அவுஸ்திரேலிய விக்கெட்களை தட்டி தூக்கிய அஸ்வின்! பயிற்சி ஆட்டத்தில் மிரட்டல் பந்துவீச்சு
சிறப்பாக பந்துவீசிய ரவிச்சந்திரன் அஸ்வின் 32 ஓட்டங்கள் விட்டுக் கொடுத்து 3 விக்கெட்டுக்களை சாய்த்தார்
வெஸ்டர்ன் அவுஸ்திரேலியா தரப்பில் நிக் ஹாப்சன் 64 ஓட்டங்களும், டி ஆர்க்கி ஷார்ட் 52 ஓட்டங்களும் எடுத்தனர்
வெஸ்டர்ன் அவுஸ்திரேலியா அணிக்கு எதிரான பயிற்சி போட்டியில் இந்திய வீரர் அஸ்வின் 3 விக்கெட்டுகளை கைப்பற்றி மிரட்டினார்.
இந்தியா - வெஸ்டர்ன் அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான பயிற்சி ஆட்டம் பெர்த்தில் நடந்தது. முதலில் ஆடிய வெஸ்டர்ன் அவுஸ்திரேலியா அணி 8 விக்கெட் இழப்புக்கு 168 ஓட்டங்கள் எடுத்தது.
இந்திய அணி வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் சிறப்பாக பந்துவீசினார். அதிரடி வீரரும், கேப்டனுமான டர்னரின் விக்கெட்டை கைப்பற்றிய அஸ்வின், பான்கிராஃப்ட் (6) மற்றும் சாம் பான்னிங் (0) ஆகியோரின் விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
பின்னர் களமிறங்கிய இந்திய அணி 8 விக்கெட் இழப்புக்கு 132 ஓட்டங்கள் மட்டுமே எடுத்ததால், 36 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. அதிகபட்சமாக கே.எல்.ராகுல் 74 ஓட்டங்கள் எடுத்தார். வெஸ்டர்ன் அவுஸ்திரேலியா அணி தரப்பில் மேத்யூ கெல்லி, லென்ஸ் மோரிஸ் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
AFP Photo
That's that from the practice match against Western Australia.
— BCCI (@BCCI) October 13, 2022
They win by 36 runs.
KL Rahul 74 (55) pic.twitter.com/5bunUUqZiH