76 ஓட்டங்கள் இலக்கு! முதல் ஓவரிலேயே விக்கெட் எடுத்து பயத்தை காட்டிய அஸ்வின்
அவுஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்டின் இரண்டாவது இன்னிங்சில், முதல் ஓவரிலேயே அஸ்வின் விக்கெட்டை வீழ்த்தினார்.
சுருண்ட இந்தியா
இந்தியா-அவுஸ்திரேலியா அணிகள் விளையாடி வரும் மூன்றாவது டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம் இன்று தொடங்கியது.
இந்திய அணி இரண்டாவது இன்னிங்சில் 163 ஓட்டங்களில் சுருண்டதால், அவுஸ்திரேலியாவுக்கு 76 ஓட்டங்கள் என்ற எளிய வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
மிரட்டிய அஸ்வின்
அதன்படி இன்று தனது துடுப்பாட்டத்தை தொடங்கிய அவுஸ்திரேலியாவுக்கு முதல் ஓவரிலேயே தமிழக வீரர் அஸ்வின் அதிர்ச்சி கொடுத்தார்.
அந்த ஓவரின் இரண்டாவது பந்திலேயே உஸ்மான் கவாஜா விக்கெட் கீப்பர் பரத்திடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.
Trust @ashwinravi99 to do the job! A wicket on 2nd ball of Day 3!⚡️#INDvAUS pic.twitter.com/OO4hGDXwjn
— BCCI (@BCCI) March 3, 2023