சென்னை வீரர் ருத்துராஜுக்கு பந்து வீச ஓடி வந்து வெறுப்பேற்றிய அஸ்வின்! அடுத்த பந்தில் தந்த பதிலடி... வைரலாகும் வீடியோ
சென்னை சூப்பர் கிங்ஸ் - டெல்லி கேப்பிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டியின் போது அஸ்வின் பந்துவீச்சை ருத்துராஜ் கெய்க்வாட் எதிர்கொண்ட போது நடந்த கூற்றின் வீடியோ வெளியாகியுள்ளது.
இப்போட்டியின் போது பேட்டிங் செய்து கொண்டிருந்த கெய்க்வாட்டுக்கு டெல்லி வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் பந்து வீசினார்.
அப்போது பேட்டிங் செய்ய ருத்துராஜ் தயாரான போது பந்து வீசுவது போல ஓடி வந்த அஸ்வின் திடீரென வீசாமல் நிறுத்தினார்.
இதன்பின்னர் மீண்டு பந்தை வீச அஸ்வின் ஓடி வந்த போது பதிலடி கொடுக்கும் வகையில் ருத்துராஜ் கையை காட்டி நிறுத்தி ஒதுங்கினார்.
இதையடுத்து மைதானத்தில் இருந்த ரசிகர்கள் கத்தி ஆரவாரம் செய்தனர். இது தொடர்பான வீடியோ வைரலாகியுள்ளது.
மேலும் அஸ்வின் வேண்டுமென்றே இப்படி செய்தார் எனவும், அதற்கு சரியான பதிலடியை தான் ருத்துராஜ் கொடுத்தார் எனவும் ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
— No caption needed (@jabjabavas) October 10, 2021