அஸ்வினை கோபப்படுத்திய ரிஷப் பாண்ட்! தப்பிய வில்லியம்சன்: வைரலாகும் வீடியோ
ஹைதராபாத் அணிக்கெதிரான ஆட்டத்தில் கையில் வந்த கேட்சை, ரிஷப் பாண்ட் விட்டதால், அஸ்வின் கடுப்பான வீடியோ தற்போது இணையத்தில் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது.
ஐபிஎல் தொடரின் நேற்றைய ஹைதராபாத் அணிக்கெதிரான ஆட்டத்தில், டெல்லி அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று, புள்ளிப் பட்டியலில் முதல் இடத்தை பிடித்துள்ளது.
இந்நிலையில், இப்போட்டியில், டெல்லி அணியின் சுழற்பந்து வீச்சாளரான அஸ்வின் கோபப்பட்ட வீடியோ வெளியாகியுள்ளது. அதில், ஆட்டத்தின் 8.6-வது பந்தையும், தன்னுடய முதல் ஓவரின் கடைசி பந்தையும், ஹைதராபாத் அணியின் நட்சத்திர வீரரான கனே வில்லியம்சனுக்கு வீசினார்.
— Jabjabavas (@jabjabavas) September 22, 2021
இதை அஸ்வின் வழக்கம் போல் வீசாமல், கேரம் பாலாக வீச, அதை ஆப் திசையில் அடித்து ஆட முற்பட்ட வில்லியம்சன், அது, பேட்டின் விளிம்பில் பட்டு, விக்கெட் கீப்பர் ரிஷப் பாண்ட்டிடம் சென்றது.
ஆனால் ரிஷப் பாண்ட் அந்த கேட்ச்சை பிடிக்காமல் கோட்டை விட, அஸ்வின் சற்று கோபமடைந்தார். ஏனெனில் அஸ்வின் இந்த முறை வரும் டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணிக்காக தேர்வாகியுள்ளார்.
— Jabjabavas (@jabjabavas) September 22, 2021
அவர் ஐபிஎல்லில் தன்னை நிரூபித்தால் மட்டுமே இந்திய அணிக்கான பிளேயிங் லெவன் அணியில் இடம் கிடைக்கும் என்பதால், அஸ்வின் இந்த ஐபிஎல் போட்டியை மிகவும் நம்புகிறார்.
நேற்றைய போட்டியில் 2.5 ஓவர் வீசிய அஸ்வின் 22 ஓட்டங்கள் விட்டுக் கொடுத்து, விக்கெட் எதுவும் வீழ்த்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.