தனது மகள்களுக்காக உதவி கேட்ட கிரிக்கெட் வீரர் அஸ்வின்!
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் ஐபிஎல் போட்டிக்கான டிக்கெட் கிடைத்தால் தனக்கு கொடுக்குமாறு இந்திய வீரர் அஸ்வின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
IPL 2024
ஐபிஎல் 2024ன் முதல் போட்டி வருகின்ற மார்ச் 22ம் திகதி முதல் தொடங்குகிறது. இதனால் உலகெங்கும் உள்ள வீரர்கள் இந்தியாவிற்கு வந்துள்ளனர்.
இதன் முதல் போட்டியானது சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சிஎஸ்கே - ஆர்சிபி அணிகளுக்கு இடையே நடைபெறவுள்ளது. இருதரப்பு அணி ரசிகர்கள் மட்டுமின்றி ஐபிஎல் ரசிகர்களும் டிக்கெட்டை பெறுவதற்கு ஆர்வமுடன் இருந்தனர்.
இந்நிலையில், இன்று காலை 9.30 மணிக்கு டிக்கெட் விற்பனை தொடங்கியதும் ரசிகர்கள் டிக்கெட்டை பதிவு செய்ய ஆர்வமுடன் இருந்தனர். பின்னர் திடீரென இணையதளம் முடக்கப்பட்டு டிக்கெட்டுகள் விற்பனை முடிந்துவிட்டதாக கூறினர்.
18 ஆயிரம் டிக்கெட்டுகள் மட்டுமே விற்பனைக்கு வந்த நிலையில் ஐபிஎல் நிர்வாகம் மோசடி செய்ததாக விமர்சனங்கள் எழுந்து வருகிறது.
அஸ்வின் பதிவு
இந்நிலையில், இந்திய கிரிக்கெட் வீரர் அஸ்வினுக்கும் டிக்கெட் கிடைக்கவில்லை என்பது தெரிய வந்துள்ளது.
இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் எக்ஸ் தளத்தில், "சேப்பாக்கத்தில் நடக்கவுள்ள CSK - RCB அணிகளுக்கு இடையேயான போட்டியை நேரில் காண்பதற்கான டிக்கெட்டுகளுக்கு டிமாண்ட் உள்ளது.
Unreal ticket demand for the #CSKvRCB #IPL2024 opener at Chepauk.
— Ashwin ?? (@ashwinravi99) March 18, 2024
My kids want to the see opening ceremony and the game.@ChennaiIPL pls help?
எனது மகள்கள் இருவரும் தொடக்க விழா மற்றும் போட்டியை பார்க்க விரும்புகிறார்கள். இதற்கு சென்னை அணி நிர்வாகம் உதவி செய்ய வேண்டும்’ என்று பதிவிட்டுள்ளார்.