அஸ்வின் பந்துவீச்சில் வீழ்ந்த ரோகித்! உடைந்து போன ரோகித் மனைவியை கட்டிபிடித்து ஆறுதல் சொன்ன அஸ்வின் மனைவி
ஐபிஎல் போட்டியில் ரோகித் சர்மா அவுட்டானதால் ஏமாற்றமடைந்த அவர் மனைவியை அஸ்வின் மனைவி கட்டிபிடித்து தேற்றிய விதம் ரசிகர்களின் மனதை வென்றுள்ளது.
ஐபிஎல் தொடரின் 44வது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதிய நிலையில் மும்பை அணி வெற்றி பெற்றது. தொடர் தோல்விகளை சந்திக்கும் மும்பை அணி பெற்ற முதல் வெற்றி இதுவாகும்.
இப்போட்டியில் மும்பை கேப்டன் ரோகித் சர்மா அஸ்வின் பந்துவீச்சில் மிட்செல்லிடம் கேட்ச் கொடுத்து வெறும் 2 ரன்களில் அவுட்டானார்.
இதை பெவிலியனில் இருந்து பார்த்த ரோகித் சர்மா மனைவி ரித்திகா ஏமாற்றமடைந்தார்.
இதையடுத்து அவர் அருகே சென்ற அஸ்வின் மனைவி பிரீத்தி ரித்திகாவை தேற்றும் வகையில் கட்டிபிடித்து ஆறுதல் சொன்னார்.
இந்த காட்சி ரசிகர்களை நெகிழ்ச்சியடைய வைத்தது.