தமிழக வீரர் அஸ்வின் களமிறக்கப்படுவாரா? ரோகித் சர்மாவின் முடிவுக்காக காத்திருக்கும் ரசிகர்கள்
மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான முதல் டி10 போட்டியில், தமிழக வீரர் அஸ்வின் களமிறக்கப்படுவாரா என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.
இந்திய அணி 3-0 என்ற கணக்கில் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை வென்றது. இந்த நிலையில் இரு அணிகளுக்கும் இடையிலான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெற உள்ளது.
இதில் முதல் போட்டி பிரையன் லாரா மைதானத்தில் இன்று நடக்கிறது. இந்திய அணிக்கு கேப்டனாக ரோகித் சர்மா செயல்பட உள்ளார். மொத்தம் 17 வீரர்கள் கொண்ட இந்திய அணி டி20 தொடரில் விளையாட உள்ளது.
இந்த நிலையில் ரவிச்சந்திரன் அஸ்வின், குல்தீப் யாதவ், ரவி பிஷ்னோய், அக்சர் படேல், ரவீந்திர ஜடேஜா ஆகிய சுழற்பந்து வீச்சாளர்கள் இந்திய அணியில் இடம்பெற்றுள்ளதால், இன்று நடக்கும் முதல் போட்டியில் எந்தெந்த சுழற்பந்து வீச்சாளர்கள் களமிறங்குவார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது.
dnaindia
குறிப்பாக, அஸ்வினுக்கு வாய்ப்பு கிடைக்குமா? ரோகித் சர்மாவின் முடிவு என்னவாக இருக்கும் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர். இதற்கு காரணம், அஸ்வின் ரன் விகிதத்தை கட்டுப்படுத்தி, எதிரணிக்கு நெருக்கடி கொடுக்கக்கூடிய பந்துவீச்சாளர் என்பது தான்.
PC: BCCI
மேலும், உலகக் கோப்பை தொடர்களில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தி அனுபவமுள்ள அஸ்வினுக்கு, இந்த தொடரில் அடுத்தடுத்து வாய்ப்புகள் அமைந்தால் அது எதிர்வரும் டி20 உலகக் கோப்பையில் தொடரில் நல்ல பலனளிக்கும் என்பது நிபுணர்களின் கருத்து.
PC: Cricket.com