சிஎஸ்கே-வை துவம்சம் செய்த அஸ்வின்! மார்பில் குத்தி கொண்டு தோனி படையை வெறுப்பேற்றி கொண்டாடிய வீடியோ
சென்னை அணியை வீழ்த்திய மகிழ்ச்சியை மார்பில் குத்தி கொண்டு அஸ்வின் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட வீடியோ வைரலாகியுள்ளது.
ஐபிஎல் தொடரின் 68வது போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதிய நிலையில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வெற்றி பெற்றது.
இந்த வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தவர் ரவிச்சந்திரன் அஸ்வின். அவர் 23 பந்துகளில் 40 ரன்கள் எடுத்து இறுதிவரை அவுட்டாகாமல் அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றார்.
Chest thumping celebration by @ashwinravi99, the man of the match, for his batting! #CSKvsRR #Ashwin #IPL2022 pic.twitter.com/SyKQLhlJgw
— Venkat Parthasarathy (@Venkrek) May 20, 2022
பந்துவீச வேகமாக ஓடிவந்த பாண்டியாவை கையை காட்டி நிறுத்திய கோலி! கோபத்தில் பந்தை தூக்கி வீசிய வீடியோ
இதில் 3 சிக்சர்களும், 2 பவுண்டரிகளும் அடங்கும். இந்நிலையில் வெற்றிக்கான பவுண்டரியை விளாசிய பின்னர் வெறித்தனமாக கொண்டாடினார் அஸ்வின்.
அதன்படி தனது மார்பில் குத்தி கொண்டு ஆக்ரோஷமாக கொண்டாடி தோனி படையை வெறுப்பேற்றினார்.
இது தொடர்பான வீடியோ இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது.