கோட்டைவிட்ட தினேஷ் கார்த்திக்! சாமர்த்தியமாக முடித்த அஸ்வின்.. வைரலாகும் வீடியோ
இக்கட்டான சூழலில் தினேஷ் கார்த்திக் விக்கெட்டை பறிகொடுத்ததால் ரசிகர்கள் அதிருப்தியடைந்தனர்
கடைசி பந்தில் வெற்றியை தேடித் தந்த அஸ்வினுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன
பாகிஸ்தானுக்கு எதிரான பரபரப்பான போட்டியில் வெற்றிக்கான ரன்னை அஸ்வின் எடுத்து அசத்தினார்.
மெல்போர்னில் நடந்த உலகக்கோப்பை போட்டியில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதின. ஆரம்பம் முதலே பரபரப்பாக சென்ற இந்தப் போட்டியில் இந்திய அணி கடைசி பந்தில் மிரட்டல் வெற்றியைப் பெற்றது.
இந்தப் போட்டியின் கடைசி ஓவரில் இந்திய அணியின் வெற்றிக்கு 16 ஓட்டங்கள் தேவைப்பட்டது. அந்த ஓவரை சுழற்பந்து வீச்சாளரான முகமது நவாஸ் வீசினார். முதல் பந்தை எதிர்கொண்ட ஹர்திக் பாண்ட்யா பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாமிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.
இந்த விக்கெட் ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை அளித்தது. பின்னர் களமிறங்கிய தினேஷ் கார்த்திக் ஒரு ரன் எடுத்தார். இதன்மூலம் ஸ்ட்ரைக்கிற்கு வந்த கோலி 2 ஓட்டங்கள் எடுத்தார். அடுத்த பந்து ஃபுல்டாசாக வர, கோலி அதனை சிக்ஸருக்கு விளாசினார். அந்த பந்து No ball ஆக அறிவிக்கப்பட்டது.
மீண்டும் வீசப்பட்ட 4வது பந்து வைடு ஆனது. அதன் பின்னர் பிரீஹிட் பந்தில் கோலி போல்டு ஆன நிலையில், பைஸ் முறையில் இந்திய அணிக்கு 3 ஓட்டங்கள் கிடைத்தது. இதன் காரணமாக கடைசி 2 பந்துகளில் 2 ஓட்டங்கள் தேவைப்பட்டது.
What an over!! pic.twitter.com/ieL711wJWh
— Adam NBA (@AdamNBA5) October 23, 2022
ஐந்தாவது பந்தை எதிர்கொண்ட தினேஷ் கார்த்திக், கோட்டினை விட்டு வெளியே வந்து அடிக்க முயன்றார். ஆனால் பந்து அவரது காலில் உரசி கீப்பரிடம் சென்றதில், அவர் ஸ்டாம்பிங் செய்யப்பட்டார்.
தினேஷ் கார்த்திக் அலட்சியமாக கோட்டிற்கு திரும்பியதும், முக்கியமான கட்டத்தில் விக்கெட்டை இழந்ததும் ரசிகர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது. அதன் பின்னர் வந்த அஸ்வின் லெக் திசையில் பந்து வீசப்படுவதை கணித்து, சாமர்த்தியமாக வைடு வாங்கினார்.
Last two balls and great presence of mind by Ashwin.
— Dr. Tanmay Motiwala (@Least_ordinary) October 23, 2022
But let’s give a bow to King Kohli.
GOAT for a reason.
Fireworks started in India already.#INDvPAK pic.twitter.com/eyyCot09nP
இறுதியில் வெற்றிக்கு ஒரு ரன் தேவை என்ற நிலையில் தூக்கி அடித்து அணியை வெற்றியை பெற வைத்தார்.
அஸ்வின் சிறப்பாக செயல்பட்டு வெற்றிக்கான ரன்னை அடித்த வீடியோவை ரசிகர்கள் இணையத்தில் மகிழ்ச்சியுடன் பகிர்ந்து வருகின்றனர்.