இந்திய அணிக்கு சிக்கல்.., இங்கிலாந்து டெஸ்ட் போட்டியிலிருந்து திடீரெனெ விலகிய அஸ்வின்
இங்கிலாந்துக்கு எதிரான 3 -வது டெஸ்ட் போட்டியில் இருந்து இந்திய கிரிக்கெட் வீரர் அஸ்வின் திடீரென விலகியுள்ளார்.
500 விக்கெட்டை வீழ்த்திய அஸ்வின்
இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இந்த போட்டி இரு அணிகளுக்கும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், 3-வது டெஸ்ட் போட்டி ராஜ்கோட்டில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்தியா, ரோகித் மற்றும் ஜடேஜா ஆகியோரின் சதத்தின் உதவியுடன் 445 ரன்கள் எடுத்து.
அடுத்து, இன்னிங்க்ஸை தொடங்கிய இங்கிலாந்து அணி, நேற்று 2 -வது நாள் ஆட்ட நேர முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 207 ரன்கள் எடுத்துள்ளது.
இதனிடையே, இங்கிலாந்து அணியின் ஜாக் கிராலி விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் 500 விக்கெட்டுகளை எடுத்த பந்துவீச்சாளர் என்ற சாதனையை அஸ்வின் படைத்துள்ளார்.
விலகிய அஸ்வின்
இந்நிலையில், 3 -வது டெஸ்ட் போட்டியில் இருந்து அஸ்வின் திடீரென விலகியுள்ளார். அவர், குடும்ப மருத்துவ அவசர நிலை காரணமாக பாதியிலேயே விலகியுள்ளதாக பிசிசிஐ அறிவித்துள்ளது.
மேலும், இந்த நேரத்தில் கிரிக்கெட் வாரியமும், இந்திய அணியும் அஸ்வினுக்கு துணை நிற்கும் என்று பிசிசிஐ தெரிவித்துள்ளது. இதனிடையே, போட்டியில் இருந்து அஸ்வின் திடீரென விலகியது இந்திய அணிக்கு பின்னடைவு என்று கூறப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |