செம்ம ஜாலியா வீரர்களுடன் உரையாடிய அஸ்வின் - வைரலாகும் வீடியோ
செம்ம ஜாலியா வீரர்களடன் உரையாடிய அஸ்வினின் வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
ராஜஸ்தான் அணி வெற்றி
நேற்று அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நேற்றிரவு 23-வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ் அணியும், ராஜஸ்தான் ராயல்சும் நேருக்கு நேர் மோதிக் கொண்டன. முதலில் துப்பாட்டம் செய்த குஜராத் அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுக்கு 177 ஓட்டங்களை சேர்த்தது.
இதன் பிறகு, 178 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கோடு ராஜஸ்தான் அணி களம் இறங்கியது. இப்போட்டியின் முடிவில் 19.2 ஓவர்களில் 7 விக்கெட்டுக்கு 179 ஓட்டங்கள் குவித்து 3 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணி அசத்தல் வெற்றி பெற்றது.
கலகலப்பாக உரையாடிய அஸ்வின்
சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில்,
குஜராத் அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் வெற்றி பெற்ற பின், ராஜஸ்தான் அணி வீரர்களுடன் "நீங்க மட்டும் தோத்தாலும் ஜெயிச்சாலும் விசில் போட்டு சந்தோஷமா இருக்கீங்க.. என்று ஜாலியாக அஸ்வின் உரையாடினார்.
தற்போது இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த ரசிகர்கள், சாம்சன் நல்லாதான்ய்யா தமிழ் பேசுகிறீங்க... என்று சிரித்துக்கொண்டு கமெண்ட் செய்து வருகின்றனர்.
#HallabolKonjamNallabol @rajasthanroyals TN Army ???? This is cool stuff @ashwinravi99 @IamSanjuSamson and @SHetmyer at the end ? #GTvRR pic.twitter.com/W7oNjG1VZs
— Frank (@franklinnnmj) April 17, 2023