ஆப்கான் வீரருக்கு ஆதரவாக இந்திய ரசிகர்களிடம் கேள்வி எழுப்பிய அஸ்வின்
இந்திய அணி ரசிகர்களுக்கு அஸ்வின் கேள்வி எழுப்பி தனது யூடியூப் சேனல் பக்கத்தில் பேசியுள்ளார்.
ஆப்கானிஸ்தான் ஒயிட்வாஷ்
ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டி20 தொடரை இந்திய அணி 3-0 என கைப்பற்றி ஒயிட்வாஷ் செய்தது.
இப்போட்டியில், சூப்பர் ஓவரை ஆப்கானிஸ்தான் அணி முதலில் ஆடியபோது, அந்த அணி வீரர் முகமது நபி கடைசி பந்தில் 1 ரன் எடுத்தார். அப்போது ரன் அவுட் செய்வதற்காக விக்கெட் கீப்பர் சஞ்சு சாம்சன் பந்தை எடுத்து ஸ்டம்ப் நோக்கி எரிந்தார்.
ஆனால் அந்த பந்து தன் மீது பட்டு வேறு பக்கம் சென்றதை பயன்படுத்திய முகமது நபி கூடுதலாக 2 ஓட்டங்கள் எடுத்தார்.
PTI
அதனால் கோபமடைந்த இந்திய கேப்டன் ரோஹித் சர்மா, 'நேர்மை தன்மை இல்லாமல் எப்படி நீங்கள் ரன்கள் எடுக்கலாம்?' என்று முகமது நபியிடம் வாதிட்டார்.
அதேபோல உடலில் பட்டதை பயன்படுத்தி நேர்மை தன்மைக்கு புறம்பாக கூடுதலாக 2 ஓட்டங்கள் எடுத்ததாக நபியை இந்திய ரசிகர்களும் விமர்சித்தனர்.
இந்த நிலையில் இது குறித்து இந்திய வீரர் அஸ்வின் பேசிய வீடியோ ஒன்றில் இந்திய ரசிகர்களை நோக்கி கேள்வி எழுப்பியுள்ளார்.
அதில் அவர் கூறியதாவது..,
“இந்திய கிரிக்கெட்டின் ஒரு ரசிகனாக இதை நான் சொல்கிறேன். அதாவது நாளை ஒரு உலகக் கோப்பை நாக் அவுட் போட்டியில் சூப்பர் ஓவரில் 1 பந்தில் 2 ரன்கள் எடுக்க வேண்டிய சூழ்நிலை இருப்பதாக வைத்துக் கொள்வோம்.
Associated Press
அப்போது இப்படி எறிந்த பந்து நம்முடைய கையுறையில் பட்டால் நாமும் ரன்கள் எடுக்க ஓடுவோம். அந்த சூழ்நிலையில் ஒரு வீரர் ஏன் ரன் எடுக்க ஓடக்கூடாது? ஒரு பவுலர் விக்கெட்டை எடுப்பதற்காக பந்து வீசும் போது தான் நீங்கள் ரன்கள் எடுக்க முடியும்.
அது உடலில் பட்ட பின் ஓடினால் லெக் பைஸ், படாமல் ஓடினால் பைஸ். அதே போல ஃபீல்டர் ரன் அவுட் செய்வதற்காக தானே பந்தை எரிகிறார்? அது என்னுடைய உடல் மீது பட்டு சென்றாலும் ரன் எடுப்பதற்கான உரிமையில் நான் ஓடுவேன். அப்படிப்பட்ட சூழ்நிலையில் கிரிக்கெட்டின் நேர்மை தன்மை எங்கே? என்னை மன்னிக்கவும்” என்று கூறினார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |