கே.எல்.ராகுலுக்கு அடுத்தடுத்து விழுந்த இடி: வெளியான தகவலால் ரசிகர்கள் ஷாக்
Nandhini
in கிரிக்கெட்Report this article
இந்திய அணியின் கிரிக்கெட் வீரர் கே.எல் ராகுல் ஆசியக் கோப்பைத் தொடரில் விளையாட வாய்ப்பு இல்லை என்ற தகவல் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கே.எல். ராகுலுக்கு அடுத்தடுத்து விழுந்த இடி
சமீபத்தில் நடைபெற்ற ஐபிஎல் தொடரில் லக்னோ அணியின் கேப்டனாக தலைமையேற்று விளையாடினார்.
இத்தொடரில் பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டத்தில் டூ பிளஸிஸ் அடித்த பவுண்டரியை தடுக்க முயற்சி செய்தபோது அவரது காலில் பலத்த காயம் ஏற்பட்டது. காலில் ஏற்பட்ட தசைபிடிப்பு காரணமாக ஐபிஎல் தொடரிலிருந்து விலகினார்.
மேலும், சமீபத்தில் நடந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியிலும் அவரை கலந்து கொள்ளவில்லை. தசைப்பிடிப்பு வலியால் அவதிப்பட்ட கே.எல்.ராகுலுக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
இதன் பின்பு ஓய்வில் இருந்து வந்த கே.எல்.ராகுல் ஆசியக் கோப்பைத் தொடரில் இந்திய அணிக்கு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் காயத்திலிருந்து குணமடையாததால் ஆசியக் கோப்பைத் தொடரில் விளையாட வாய்ப்பு இல்லை என்ற தகவல் வெளியாகி இருக்கிறது. இத்தகவல் சமூகவலைத்தளங்களில் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |