ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி: இலங்கையை வீழ்த்தி ஆப்கானிஸ்தான் அபார வெற்றி!
துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் தொடங்கியது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி.
இலங்கை அணியை வீழ்த்தி ஆப்கானிஸ்தான் அணி அபார வெற்றி.
ஆசிய கோப்பையின் முதல் போட்டியில் இலங்கை அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆப்கானிஸ்தான் அணி முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது.
2022ம் ஆண்டுக்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி துபாய் சர்வதேச மைதானத்தில் இன்று கோலாகளமாக தொடங்கியது.
இதன் முதல் போட்டியில் இலங்கை அணியும், ஆப்கானிஸ்தான் அணியும் மோதின, இதில் நாணய சுழற்சியில் வென்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
இதையடுத்து முதலில் பேட்டிங்கில் களமிறங்கிய இலங்கை அணி 19.4 ஓவர்கள் முடிவில் 10 விக்கெட்களையும் இழந்து 105 ஓட்டங்களை சேர்த்தது.
இலங்கை அணியில் அதிகப்பட்சமாக ராஜபக்சே 29 பந்திகளில் 5 பவுண்டரிகள் மற்றும் 1 சிக்ஸருடன் 38 ஓட்டங்களும், கருணாரத்ன 38 பந்திகளில் 3 பவுண்டரிகள் மற்றும் 1 சிக்ஸருடன் 31 ஓட்டங்களும் குவித்தனர்.
இதனைத் தொடர்ந்து இரண்டாவது இன்னிங்ஸில் களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணி வெறும் 10.1 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்களை மட்டுமே இழந்து வெற்றி இலக்கான 106 ஓட்டங்கள் குவித்து அபார வெற்றி பெற்றுள்ளனர்.
ஆப்கானிஸ்தான் அணியில் தொடக்க வீரர்களாக களமிறங்கிய ரஹ்மானுல்லா குர்பாஸ் (Rahmanullah Gurbaz) அதிரடியாக 18 பந்திகளில் 3 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்கள் விளாசி 40 ஓட்டங்களும், ஹஜ்ரத்துல்லாஹ் ஜஸாய் (Hazratullah Zazai) 28 பந்திகளில் 5 பவுண்டரிகள் மற்றும் 1 சிக்ஸர்கள் விளாசி 37 ஓட்டங்களும் குவித்தனர்.
இதன்மூலம் ஆசிய கோப்பையின் முதல் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி தனது முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது.
கூடுதல் செய்திகளுக்கு: ரஷ்ய ஆக்கிரமிப்பாளர்களை குலைநடுங்க வைத்த எச்சரிக்கை: விமான தினத்தில் ஜெலென்ஸ்கி பேச்சு
இந்தபோட்டியில் 3.4 ஓவர்கள் பந்துவீசி 11 ஓட்டங்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து 3 விக்கெட்களை கைப்பற்றியதன் மூலம் ஃபசல்ஹக் பாரூக்கி (Fazalhaq Farooqi) ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.