அடுத்தடுத்து சதம் விளாசிய வங்கதேச பேட்ஸ்மேன்கள்: சவாலான இலக்கை துரத்தும் ஆப்கானிஸ்தான்
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் இன்றைய போட்டியில் வங்கதேச அணி 335 ஓட்டங்களை ஆப்கானிஸ்தானுக்கு இலக்காக நிர்ணயித்துள்ளது.
இலக்கை நிர்ணயித்த வங்கதேச அணி
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் வங்கதேச அணி மற்றும் ஆப்கானிஸ்தான் அணி மோதிக் கொள்ளும் போட்டி பாகிஸ்தானின் கடாபி மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
இதில் டாஸ் வென்ற வங்கதேச அணி நாணய சுழற்சியில் வெற்றி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதல் பேட்டிங்கில் களமிறங்கிய வங்கதேச அணி 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 334 ஓட்டங்கள் குவித்துள்ளது.
ஆப்கானிஸ்தானின் பந்துவீச்சை பொறுத்தவரை முஜீப் உர் ரஹ்மான் மற்றும் குல்பதின் நாயப் தலா விக்கெட்டை வீழ்த்தி உள்ளனர்.
அடுத்தடுத்து சதம்
வங்கதேச அணியை பொறுத்தவரை மெஹிதி ஹசன் மிராஸ்(Mehidy Hasan Miraz) மற்றும் சாண்டோ(Shanto) அடுத்தடுத்து சதம் விளாசி ஆப்கானிஸ்தான் பந்துவீச்சாளர்களை சிதறடித்தனர்.
119 பந்துகளை எதிர்கொண்ட மெஹிதி ஹசன் மிராஸ் 7 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்சர்களுடன் 112 ஓட்டங்கள் குவித்தார்.
சாண்டோ 105 பந்துகளை எதிர்கொண்டு 9 பவுண்டரிகள் 2 சிக்சர்களுடன் 104 ஓட்டங்கள் குவித்து அசத்தினார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |