இலங்கையை புரட்டி போட்ட சிராஜ் புயல்: 50 ஓட்டங்களுக்கு ஆல்-அவுட்டான இலங்கை அணி
ஆசிய கோப்பை இறுதிப் போட்டியில் 15.2 ஓவர்கள் முடிவிலேயே வெறும் 50 ஓட்டங்களுக்கு ஆல்-அவுட்டாகி இலங்கை அணி தடுமாறியுள்ளது.
இலங்கையை பந்தாடிய சிராஜ் புயல்
இந்தியா இலங்கை இடையிலான ஆசிய கோப்பை இறுதிப் போட்டி கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.
அதன்படி முதல் பேட்டிங்கில் களத்தில் இறங்கிய இலங்கை அணி துடுப்பாட்ட வீரர்களுக்கு பெரும் அதிர்ச்சி தரும் விதமாக அடுத்தடுத்து விக்கெட்டுகள் சரிந்து வருகிறது.
இந்திய பந்துவீச்சாளர் முகமது சிராஜ் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் இலங்கை வீரர்கள் பாத்தும் நிஸ்ஸங்க(2), சதீர சமரவிக்ரம(0), சரித் அசலங்கா(0), தசுன் ஷனக(0), தனஞ்சய டி சில்வா(4) மற்றும் குசல் மெண்டிஸ்(17) என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து வெளியேறியுள்ளனர்.
பும்ரா தன்னுடைய பங்கிற்கு 5 ஓவர்கள் பந்துவீசி குசல் பெரேரா-வின் விக்கெட்டையும், ஹர்திக் பாண்டியா தன் பங்கிற்கு துனித் வெல்லலகே(8), பிரமோத் மதுஷன்(1), மற்றும் பத்ரனா(0) ஆகிய 3 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
இந்திய பந்துவீச்சாளர் முகமது சிராஜ் 7 ஓவர்கள் பந்துவீசி 21 ஓட்டங்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து 6 விக்கெட்டை கைப்பற்றி வரலாறு படைத்துள்ளார்.
இறுதியில் 15.2 ஓவர்கள் முடிவில் இலங்கை அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 50 ஓட்டங்கள் மட்டுமே குவித்துள்ளது.
இதனை தொடர்ந்து 51 ஓட்டங்கள் குவித்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் இந்திய அணி பேட்டிங்கில் களமிறங்க உள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |