ஆசிய கோப்பையில் ஹாங்காங்கிற்கு தொடரும் சோகம் - வங்கதேசம் அசத்தல் வெற்றி
ஆசிய கோப்பையில் 2வது தோல்வியை பெற்ற ஹாங்காங் சூப்பர் 4 செல்லும் வாய்ப்பை இழக்கிறது.
வங்கதேசம் வெற்றி
ஆசிய கோப்பை தொடர், கடந்த செப்டம்பர் 9 ஆம் திகதி தொடங்கி நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற 3வது லீக் போட்டியில், பி பிரிவில் உள்ள ஹாங்காங் மற்றும் வங்கதேசம் அணிகள் மோதியது.
நாணய சுழற்சியில் வென்ற வங்கதேச அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
இதன்படி, முதலில் துடுப்பாட்டம் ஆடிய ஹாங்காங் அணி, 20 ஓவர்கள் முடிவில், 7 விக்கெட்களை இழந்து, 143 ஓட்டங்கள் குவித்தது. அதிகபட்சமாக, நிஷாகத் கான் 42 ஓட்டங்கள் குவித்தார்.
அதைத்தொடர்ந்து, 144 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய வங்கதேச அணி, 17.4 ஓவர்களில் 3 விக்கெட்களை மட்டுமே இழந்து, 144 ஓட்டங்கள் எடுத்தது. அணித்தலைவர் லிட்டன் தாஸ் அரைசதமடிமத்து(59) அசத்தினார்.
ஹாங்கிற்கு தொடரும் சோகம்
இதன் மூலம், 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வங்கதேச அணி வெற்றி பெற்றது.
ஏற்கனவே முதல் லீக் போட்டியில், ஆப்கானிஸ்தானிடம் தோல்வியை தழுவிய ஹாங்காங் அணி, இந்த போட்டியிலும் தோற்றதன் மூலம் சூப்பர் 4 சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை இழந்து தொடரை விட்டு வெளியேறுகிறது.
ஹாங்காங் அணி, இதுவரை 4 ஆசிய கோப்பை தொடர்களில் பங்குபெற்றுள்ள நிலையில், இதுவரை ஒரு போட்டியில் கூட வெற்றி பெற்றதில்லை.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |