ஆசியக் கிண்ணம் 2025: புள்ளிப்பட்டியலில் இலங்கைக்கு உள்ள சிக்கல்
ஆசியக் கிண்ணத் தொடரில் பிரிவு பி'யில் மூன்று அணிகள் போட்டியிடுவதால் சூப்பர் 4 தகுதிக்கு எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.
ஆசியக் கிண்ணத் தொடர்
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வரும் ஆசியக் கிண்ணத் தொடர் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது.
பிரிவு பி'யில் இலங்கை அணி 2 போட்டிகளில் 2 வெற்றிகள் பெற்றதன் மூலம் 4 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது.
நேற்று நடந்த போட்டியில் வங்காளதேசம் 8 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தானை வீழ்த்தியது. இதனால் ஆப்கானிஸ்தான் தனது கடைசிப் போட்டியில் இலங்கையை வீழ்த்த வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.
ஏனெனில், இரண்டாவது இடத்தில் உள்ள வங்காளதேசமும் 4 புள்ளிகள் பெற்றுள்ளது. ஆப்கானிஸ்தான் 2 புள்ளிகள் மட்டுமே கொண்டுள்ளதால் கட்டாயம் வெற்றி பெற வேண்டும்.
இதில் இலங்கை அணிக்கு உள்ள சிக்கல் என்னவென்றால், ஆப்கானிஸ்தான் அணியுடனான மோதலில் மோசமான தோல்வியை சந்திக்கக் கூடாது என்பதேயாகும்.
இதற்கு காரணம் ஆப்கானிஸ்தான் +2.150 ரன்ரேட் கொண்டுள்ளது. வங்காளதேசம் -0.270 ரன்ரேட் மற்றும் இலங்கை +1.546 ரன்ரேட் வைத்துள்ளன.
ரன்ரேட்
ஒருவேளை இலங்கை மோசமாக தோல்வியடைந்தால் ரன்ரேட் குறையும் வாய்ப்புள்ளது.
அப்போது மூன்று அணிகளும் 4 புள்ளிகளுடன் சமநிலையில் இருக்க, ரன்ரேட்டில் முதல் 2 இடங்களில் உள்ள அணிகள் சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறும்.
எனினும், இலங்கை வலுவான அணியைக் கொண்டிருப்பதால் தோல்வியடையவே வாய்ப்பில்லை என்று கூறலாம். ஆப்கானிஸ்தான் அணி எப்போது வேண்டுமானாலும் அதிர்ச்சி கொடுக்கும் என்பதாலேயே இலங்கைக்கு சிக்கல் எழலாம் என்ற சந்தேகம் வருகிறது.
வங்காளதேச அணி ரன்ரேட்டில் மற்ற இரு அணிகளை விட பின்தங்கியுள்ளதால், இலங்கை அணி வெற்றி பெறுவதையே நம்பியுள்ளது.
அப்படி நடக்கும்பட்சத்தில் இலங்கை மற்றும் வங்காளதேசம் ஆகிய இரண்டு அணிகளும் அடுத்து சுற்றுக்கு செல்லும்.
அபுதாபியில் நாளை நடக்கும் இலங்கை, ஆப்கானிஸ்தான் போட்டியில் இதற்கான முடிவு தெரிந்துவிடும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |