ஆசிய கிண்ணம் 2025 பட்டத்தை வென்றது இந்தியா., பாகிஸ்தானை அலறவிட்ட திலக் வர்மா, குலதீப் யாதவ்
இந்திய கிரிக்கெட் அணி 9-வது ஆசிய கிண்ணம் பட்டத்தை வென்றுள்ளது.
2025 ஆசிய கிண்ணம் T20 தொடரின் இறுதிப்போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதின.
துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் இந்தியா 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
நாணயசுழற்சியை வென்ற இந்தியா பந்துவீச்சை தெரிவு செய்ய, பாகிஸ்தான் முதலில் துடுப்பாடியது. 19.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 146 ஓட்டங்கள் எடுத்தது.
சாஹிப்சாதா ஃபர்ஹான் 38 பந்துகளில் 57 ஓட்டங்கள் மற்றும் ஃபகார் சமான் 35 பந்துகளில் 46 ஓட்டங்கள் எடுத்து சிறப்பாக விளையாடினர். மற்ற வீரர்கள் சிறப்பாக விளையாட முடியவில்லை.
இந்திய பந்துவீச்சில் குலதீப் யாதவ் 4 விக்கெட்டுகள், அக்சர் படேல், வருண் சக்கரவர்த்தி மற்றும் ஜஸ்பிரித் பும்ரா தலா 2 வெய்க்கெட்டுகளை எடுத்தனர்.
146 எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் அடுத்து களமிறங்கிய இந்திய அணி, 19.4 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 150 ஓட்டங்கள் எடுத்து தொடரை வென்றது.
மேலும் இந்த வெற்றியின் மூலம் இந்தியா 9-வது ஆசிய கிண்ணம் பட்டத்தை வென்றுள்ளது.
இந்திய அணியின் ஆட்டத்தில், தொடக்க வீரர்கள் விரைவில் வெளியேறியதால், அணி 20 ஓட்டங்களில் 3 விக்கெட்டுகளை இழந்து இக்கட்டான சூழலில் சிக்கியது.
ஆனால், திலக் வர்மா 69 ஓட்டங்கள் எடுத்து தன்னம்பிக்கையுடன் விளையாடி அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார்.
அவருடன் சிவம் துபே சிறப்பாக விளையாடி 33 ஓட்டங்கள் எடுத்தார். கடைசியில் ரிங்கு சிங் பவுண்டரி அடித்து ஆட்டத்தை சிறப்பாக முடித்தார்.
இப்போட்டியில் இந்திய வீரர்கள் ஒருங்கிணைந்து அணியாக விளையாடினர். இந்திய பந்துவீச்சு மற்றும் பீல்டிங் சிறப்பாக இருந்தது. பாகிஸ்தான் பந்துவீச்சு சிறப்பாக இருந்தாலும், இந்திய வீரர்கள் அழுத்தத்தை சமாளித்து வெற்றியை பெற்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |