ஆசிய கோப்பை 2025: கைகுலுக்க மறுத்த பாகிஸ்தான் கேப்டன்: கட்டியணைத்த சூர்யகுமார் யாதவ்!
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடருக்கான செய்தியாளர்கள் சந்திப்பின் போது பாகிஸ்தான் கேப்டனின் செயல் கவனம் பெற்றுள்ளது.
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர்
2025 ம் ஆண்டுக்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இன்று தொடங்குகிறது.
இதனை முன்னிட்டு 8 அணிகளின் கேப்டன்களும் நேற்று செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டனர்.
இதில் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் மற்றும் பாகிஸ்தான் கேப்டன் சல்மான் அலி ஆகா ஆகிய இருவரும் கலந்து கொண்டனர்.
கவனம் பெற்ற பாகிஸ்தான் கேப்டனின் செயல்
இந்த செய்தியாளர்கள் சந்திப்பில் ஊடகங்களின் கவனம் முழுவதும் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மீதே அதிகமாக இருந்தது.
பெரும்பாலான கேள்விகள் இந்தியா-பாகிஸ்தான் இடையிலான போட்டிகள் குறித்தே இடம்பெற்றன.
ஆனால் இந்த சந்திப்பு நிறைவடையும் போது பாகிஸ்தான் கேப்டன் சல்மான் அலி ஆகா-வின் செயல் கவனம் பெற்றது.
இத்தகைய சந்திப்பின் இறுதியில் எப்போதும் அணியின் கேப்டன்கள் கைகுலுக்கி, கட்டித்தழுவி செல்வது வழக்கம், ஆனால் இந்த சந்திப்பின் இறுதியில் பாகிஸ்தான் கேப்டன் சல்மான் அலி ஆகா மற்ற கேப்டன்களுடன் கைகுலுக்குவதையோ, கட்டித்தழுவதையோ தவிர்த்து விட்டு உடனடியாக வெளியேறினார்.
அதே சமயம் இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ் ஆப்கானிஸ்தான் கேப்டன் ரஷித் கான் மற்றும் பிற கேப்டன்களுடன் கைகுலுக்கி கட்டிப்பிடித்து விடைப்பெற்றார்.
இந்திய கிரிக்கெட் அணி தனது முதல் லீக் போட்டியில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணியுடன் புதன்கிழமை மோத இருப்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |