ஆசிய கோப்பை கிரிக்கெட்! வெற்றியுடன் தொடங்கும் முனைப்பில் இலங்கை! அணியின் உத்தேச பட்டியல்
ஆசிய கோப்பை முதல் ஆட்டத்தில் இலங்கை-ஆப்கானிஸ்தான் அணிகள் மோதுகின்றன.
வெற்றியுடன் கணக்கை தொடங்க இரு அணிகளும் வரிந்து கட்டும் என்பதால் பரபரப்புக்கு குறைவிருக்காது.
ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி 1984-ம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வருகிறது.
15-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி (20 ஓவர்) முதலில் இலங்கையில் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கிய இலங்கை தங்களால் இந்த போட்டியை நடத்த இயலாது என்று கூறி விட்டது.
இதையடுத்து அங்கு நடைபெற இருந்த 15-வது ஆசிய கோப்பை போட்டி ஐக்கிய அரபு அமீரகத்துக்கு மாற்றப்பட்டது. இதன்படி இந்த போட்டி அங்குள்ள துபாய் மற்றும் சார்ஜாவில் இன்று (சனிக்கிழமை) தொடங்கி செப்டம்பர் 11ம் திகதி வரை நடக்கிறது.
முதல் ஆட்டத்தில் இலங்கை - ஆப்கானிஸ்தான் அணிகள் மோதுகின்றன. வெற்றியுடன் கணக்கை தொடங்க இரு அணிகளும் வரிந்து கட்டும் என்பதால் பரபரப்புக்கு குறைவிருக்காது. இலங்கை அணியில் குசல் மென்டிஸ், அசலங்கா, தனஞ்ஜெயா டி சில்வா, ஹசங்கா உள்ளிட்டோர் நல்ல நிலையில் உள்ளன
போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல்
இலங்கை: ஷனகா (கேப்டன்), குணதிலகா, பதும் நிசாங்கா, குசல் மென்டிஸ், சாரித் அசலங்கா, பானுகா ராஜபக்சே, அஷென் பண்டாரா, தனஞ்ஜெயா டி சில்வா, ஹசரங்கா, தீக்ஷனா, ஜெப்ரி வண்டர்சே, பிரவீன் ஜெயவிக்ரமா, சமிகா கருணாரத்னே, தில்ஷன் மதுஷனகா, மதீஷா பதிராணா, நுவானிது பெர்னாண்டோ, தினேஷ் சன்டிமால்.
ஆப்கானிஸ்தான்: முகமது நபி (கேப்டன்), நஜிபுல்லா ஜட்ரன், அப்சர் ஷசாய், அஸ்மத்துல்லா ஒமர்ஷாய், பரித் அகமது மாலிக், பாசல் ஹக் பரூக்கி, ஹஷ்மத்துல்லா ஷகிடி, ஹஸ்ரத்துல்லா ஷசாய், இப்ராகிம் ஜட்ரன், கரிம் ஜனத், முஜீப் ரகுமான், நவீன் உல் ஹக், நூர் அகமது, ரமனுல்லா குர்பாஸ், ரஷித்கான், சமியுல்லா ஷின்வாரி, உஸ்மான் கானி.