2022 ஆசிய கோப்பை கிரிக்கெட்! முதல் சிக்சர் விளாசிய பெருமையை பெற்ற இலங்கை வீரர் ராஜபக்ச
2022ஆம் ஆண்டு ஆசிய கோப்பை தொடரில் முதல் சிக்சர் அடித்தவர் என்ற பெருமையை தட்டி சென்ற பனுகா ராஜபக்ச
29 பந்துகளில் 38 ரன்கள் விளாசல்
2022ஆம் ஆண்டு ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் தொடரில் முதல் சிக்சர் அடித்த வீரர் என்ற பெருமையை இலங்கையின் பனுகா ராஜபக்ச பெற்றுள்ளார்.
15வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் நேற்று தொடங்கியது.
தொடரின் முதல் போட்டியில் இலங்கை அணியும், ஆப்கானிஸ்தான் அணியும் மோதின. இப்போட்டியில் ஆப்கானிஸ்தான் 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
AFP via getty
இதில் இலங்கை அணி முதலில் பேட்டிங் ஆடியது. அந்த அணியின் பனுகா ராஜபக்ச 29 பந்துகளில் 38 ரன்கள் எடுத்தார். இதில் 5 பவுண்டரிகளும், ஒரு சிக்சரும் அடக்கமாகும்.
இந்த சிக்சர் மூலம் 2022 ஆசிய கிரிக்கெட் தொடரில் முதல் சிக்சர் அடித்த வீரர் என்ற பெயரை அவர் தட்டி சென்றுள்ளார்.