ஆசிய கோப்பை! இன்றைய இந்தியா - பாகிஸ்தான் போட்டியில் தினேஷ் கார்த்திக் இருப்பாரா? உத்தேச பட்டியல்
ஆசிய கோப்பை சூப்பர் 4 போட்டியில் இந்தியா - பாகிஸ்தான் இன்று மோதல்.
உலகளவில் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள போட்டி.
ஆசிய கோப்பையின் சூப்பர் 4 பிரிவின் முக்கிய ஆட்டத்தில் இன்று இந்தியா - பாகிஸ்தான் மோதுகின்றன. ஏற்கனவே லீக் சுற்றில் மோதியபோது இந்திய அணி பாகிஸ்தானை 147 ரன்களுக்குள் சுருட்டி, 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றியைப் பெற்றது.
இன்றைய போட்டியிலும் இந்தியா வெற்றி பெற கடுமையாக உழைக்கும், அதே சமயத்தில் லீக் போட்டியில் தோற்றதற்கு பழிக்கு பழி தீர்க்க பாகிஸ்தான் அணியும் முயலும்.
ரிஷப் பண்ட் முதல் போட்டியில் சேர்க்கப்படாத நிலையில் அடுத்த போட்டியில் பேட்டிங் செய்ய வாய்ப்பு கிடைக்கவில்லை. இவரை பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் சேர்த்தால், நிச்சயம் தனது திறமையை நிரூபிக்க வேண்டும் என்ற அழுத்தத்தோடு விளையாடி, சொதப்ப வாய்ப்புள்ளது. இதனால், மீண்டும் தினேஷ் கார்த்திக்தான் களமிறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
BCCI
இந்திய அணி உத்தேச பட்டியல்:
ரோஹித் ஷர்மா, கே.எல்.ராகுல், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ஹார்திக் பாண்டியா, தினேஷ் கார்த்திக், தீபக் ஹூடா, ரவிச்சந்திரன் அஸ்வின், புவனேஷ்வர் குமார், அர்ஷ்தீப் சிங், யுஜ்வேந்திர சஹல்.