இலங்கை, இந்தியா போன்ற முன்னணி அணிகள் விளையாடும் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் குறித்து வெளியான முக்கிய தகவல்
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் 2023ஆம் ஆண்டுக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான அறிவிப்பை ஆசிய கிரிக்கெட் கவுன்சில் வெளியிட்டுள்ளது. இலங்கை, இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம் ஆகிய அணிகள் பங்கேற்கும் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படுகிறது.
15-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி கடந்த ஆண்டு செப்டம்பரில் இலங்கையில் நடைபெற இருந்த நிலையில், கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்த ஆண்டு ஜூன் மாதத்தில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் இந்த ஆண்டு இறுதிவரை தொடர்ச்சியாக சர்வதேச போட்டிகள் இருப்பதால் இந்த ஆண்டில் ஆசிய கோப்பை போட்டியை நடத்த சாத்தியம் இல்லை என 4 அணிகளுக்கும் தெரிவித்ததை அடுத்து போட்டி ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.