வங்கதேச அணி எளிதான எதிரி! இலங்கை கிரிக்கெட் அணி கேப்டன் வார்த்தையால் எழுந்த சர்ச்சை
வங்கதேச அணி எங்களுக்கு எளிதான எதிரியாக இருக்கும் என இலங்கை கிரிக்கெட் கேப்டன் ஷனகா கருத்து.
இலங்கை அணியில் உலக தரம் வாய்ந்த பந்துவீச்சாளர்கள் ஒருவர் கூட இல்லை என கூறிய வங்கதேச அணி இயக்குனர்
இலங்கை கிரிக்கெட் அணியில் உலக தரம் வாய்ந்த பந்துவீச்சாளர்கள் ஒருவர் கூட இல்லை என வங்கதேச கிரிக்கெட் அணியின் இயக்குனர் கலீத் மஹ்முத் கூறியுள்ளார்.
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் இன்றைய போட்டியில் இலங்கை அணியும், வங்கதேச அணியும் மோதுகின்றன. இந்த நிலையில் இலங்கை கேப்டன் தஷுன் ஷனகா அளித்த பேட்டியில், வங்கதேச அணி எங்களுக்கு எளிதான எதிரியாக இருக்கும், ஏனெனில் அவர்களிடம் இரண்டு உலகத்தரம் வாய்ந்த பந்துவீச்சாளர்கள் மட்டுமே உள்ளனர் என கூறினார்.
AP
அவரின் இந்த கருத்து விவாதத்தையும், சர்ச்சையையும் கிளப்பிய நிலையில் அதற்கு வங்கதேச அணியின் இயக்குனர் கலீத் மஹ்முத் பதில் தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், இலங்கை அணியில் தரமான பந்துவீச்சாளர்கள் இல்லை. உலகதரம் வாய்ந்த பந்துவீச்சாளர்கள் யாரும் இருப்பதாக தெரியவில்லை என தெரிவித்துள்ளார்.
இது குறித்து கருத்து பதிவிட்ட இலங்கை அணியின் ஜாம்பவான் மஹேலா ஜெயவர்தனே, இலங்கை பந்துவீச்சாளர்கள், துடுப்பாட்ட வீரர்கள் தங்கள் கிளாஸை (திறமையை) காட்ட இது தான் சரியான நேரம் போல் உள்ளது என பதிவிட்டுள்ளார்.
Looks like it’s time for @OfficialSLC bowlers to show the class and batters to show who they are on the field..??#AsiaCup2022 https://t.co/txWm7wH4nC
— Mahela Jayawardena (@MahelaJay) August 31, 2022