ஆசிய கோப்பை! இந்தியாவை வீழ்த்தும் முனைப்புடன் களமிறங்கும் இலங்கை... ப்ளேயிங் 11 உத்தேச பட்டியல்
ஆசிய கோப்பை தொடரின் இன்றைய முக்கிய போட்டியில் இலங்கை - இந்தியா மோதல்.
வெளியான இரு அணியின் உத்தேச வீரர்கள் பட்டியல்.
ஆசிய கோப்பை தொடரின் சூப்பர்4 சுற்று போட்டியில் இன்று இலங்கை - இந்தியா மோதுகின்றன.
சூப்பர்4 சுற்றில் இந்தியா தனது முதல் ஆட்டத்தில் பாகிஸ்தானுக்கு எதிராக போராடி தோல்வி அடைந்தது. இந்த நிலையில் இந்திய அணி துபாயில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடக்கும் சூப்பர்4 சுற்று ஆட்டத்தில் இலங்கையை எதிர்கொள்கிறது.
முந்தைய ஆட்டத்தில் விராட் கோலி அரைசதம் அடித்து பார்முக்கு திரும்பினார். தொடக்க வீரர்களான கேப்டன் ரோகித் சர்மா, துணை கேப்டன் லோகேஷ் ராகுலும் ஓரளவு நன்றாக ஆடினர். ஆனால் மிடில் வரிசை தான் கொஞ்சம் தடுமாறி விட்டது. பவுலிங்கும் சொதப்பியது.
BCCI
பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் வெளியே உட்கார வைக்கப்பட்ட தினேஷ் கார்த்திக்கை மீண்டும் களம் இறக்குவது குறித்தும் அணி நிர்வாகம் பரிசீலிக்கிறது.
இலங்கை அணியை பொறுத்தவரை லீக் சுற்றில் தடுமாறிய போதும் சூப்பர்4 சுற்றில் தனது முதல் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தானை வீழ்த்தி திடகாத்திரமான நம்பிக்கையுடன் உள்ளது. அந்த அணியில் பேட்டிங்கில் கேப்டன் ஷனகா, குசல் மென்டிஸ், பானுகா ராஜபக்சே, பந்து வீச்சில் ஹசரங்கா, சமிகா கருணாரத்னே, தீக்ஷனா உள்ளிட்டோர் நல்ல நிலையில் உள்ளனர். அதே உத்வேகத்துடன் இந்தியாவுக்கு எதிராகவும் வரிந்து கட்டுவதால் களத்தில் பரபரப்புக்கு பஞ்சமிருக்காது.
இரு அணிகளின் உத்தேச பட்டியல்
இலங்கை: பதும் நிசாங்கா, குசல் மென்டிஸ், சாரித் அசலங்கா, குணதிலகா, தசுன் ஷனகா (கேப்டன்), பானுகா ராஜபக்சே, ஹசரங்கா, சமிரா கருணாரத்னே, தீக்ஷனா, அசிதா பெர்னாண்டோ, மதுஷனகா.
இந்தியா: லோகேஷ் ராகுல், ரோகித் சர்மா (கேப்டன்), விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ரிஷப் பண்ட், தீபக் ஹூடா அல்லது தினேஷ் கார்த்திக், ஹர்திக் பாண்ட்யா, புவனேஷ்வர்குமார், ரவி பிஷ்னோய், அர்ஷ்தீப்சிங், யுஸ்வேந்திர சாஹல் அல்லது அக்ஷர் பட்டேல்.