ஆசிய கோப்பை கிரிக்கெட்! ஆப்கானிஸ்தானை பழிதீர்த்த இலங்கை... களத்தில் மோதி கொண்ட இரு வீரர்கள் வீடியோ
ஆசிய கோப்பை சூப்பர் 4 சுற்றின் முதல் போட்டியில் இலங்கை வெற்றி.
லீக் போட்டியில் ஆப்கானிஸ்தானிடம் தோற்றதற்கு பழிதீர்த்து கொண்டது.
ஆசிய கோப்பை தொடரின் சூப்பர்4 சுற்றின் முதல் போட்டியில் ஆப்கானிஸ்தானை வீழ்த்தி இலங்கை அபார வெற்றி பெற்றுள்ளது.
இப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து ஆப்கானிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்தது. நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 175 ரன்கள் குவித்தது.
176 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை அணி 19.1 ஓவரில் 6 விக்கெட்டுகளை 179 ரன்கள் எடுத்து வெற்றி இலக்கை தொட்டது. இதன்மூலம் லீக் போட்டியில் ஆப்கானிஸ்தானிடம் தோற்றதற்கு இலங்கை அணி பழிதீர்த்து கொண்டது.
cricketaddictor
இதனிடையில் போட்டியின் ஒரு கட்டத்தின் போது ஆப்கானிஸ்தான் வீரர் ரஷித் கானுக்கும், இலங்கை வீரர் தனுஷ்கா குணத்திலகாவுக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது.
குணத்திலகா, ரஷித் கான் பந்துவீச்சில் பவுண்டரி விளாசியதை தொடர்ந்து, ரஷித் அவரிடம் ஏதோ சொல்வது போல தெரிந்தது. இதையடுத்தே இருவருக்கும் மோதல் உருவானது.
பின்னர் சக வீரர்கள் அதை தடுத்தனர். இதனை தொடர்ந்து அதே ஓவரில் குணத்திலகா அவுட்டானார்.
SL vs AFG - Rashid Khan pic.twitter.com/EbNMcojZo9
— MohiCric (@MohitKu38157375) September 3, 2022