ஆசிய கோப்பை இறுதிப்போட்டி! இலங்கை, பாகிஸ்தான் இன்று மோதல்... அதிக வெற்றிவாய்ப்பு யாருக்கு?
ஆசிய கோப்பை தொடர் இறுதிப் போட்டியில் பாகிஸ்தானும், இலங்கையும் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றன.
ஆசிய கோப்பை கிரிக்கெட் வரலாற்றில் இலங்கை இதுவரை 10 முறை இறுதிப் போட்டியில் விளையாடி 5 முறை சாம்பியன் பட்டத்தை வென்று இருக்கிறது. பாகிஸ்தான் அணியை பொறுத்தவரை இதுவரை 2 முறை தான் ஆசிய கோப்பையை வென்று இருக்கிறது.
ஆசிய கோப்பை இறுதிப் போட்டியில் இவ்விரு அணிகளும் 3 முறை மோதி இருக்கிறார்கள். இதில் இலங்கை 2 முறையும், பாகிஸ்தான் ஒரு முறையும் வென்று இருக்கிறது. இலங்கை அணியின் வெற்றிக்கு காரணம், அவர்களுடைய பயம் அறியாத அதிரடி ஆட்டம் தான்.
AFP
இதனால் நாளைய போட்டியிலும் அதனை அவர்கள் கடைப்பிடித்தால் பாகிஸ்தானுக்கு அது சிக்கலை ஏற்படுத்தும். இரு தினங்களுக்கு முன்னர் நடைபெற்ற சம்பிரதாய ஆட்டத்தில் பாகிஸ்தானை வென்ற உத்வேகத்துடன் இலங்கை அணி இன்று களமிறங்க உள்ளது.
உத்தேச அணி விபரம்
இலங்கை: நிசாங்கா, குசேல் மெண்டிஸ், தனஞ்செய்யா, குணதிலாகா, ராஜபக்சா, ஷனாகா, ஹசரங்கா, கருணரத்னே, பிரேமோம், தீக்சனா, மதுசங்கா
பாகிஸ்தான்: பாபர் அசாம், முகமது ரிஸ்வான், ஃபக்கர் ஷமான், இஃபதிகார் அகமது, குஷ்தில் ஷா, ஆசிப் அலி, முகமது நவாஸ், ஷதாப் கான், ஹாரிஸ் ரவுஃப், நஷிம் ஷா, முகமது ஹஸ்னாயின்.