ஆசிய கோப்பை கிரிக்கெட்! இந்தியாவை ஓடவிட்ட இலங்கை... ஜாம்பவான் ஜெயவர்தனே சொன்ன வார்த்தைகள்
ஆசிய கோப்பை சூப்பர் 4 சுற்றில் இந்தியாவை வீழ்த்திய இலங்கை.
சிறப்பாக செயல்பட்ட இலங்கை வீரர்களுக்கு ஜாம்பவான் மஹேலா ஜெயவர்தனே வாழ்த்து.
ஆசிய கோப்பையின் முக்கியமான போட்டியில் இந்திய அணியை வீழ்த்தி இலங்கை அபார வெற்றி பெற்றதற்கு மஹேலா ஜெயவர்தனே வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ஆசிய கோப்பையின் சூப்பர் 4 சுற்றின் முக்கிய போட்டியில் இந்தியா - இலங்கை அணிகள் முதன்முறையாக மோதின. முதலில் பேட்டிங் ஆடிய இந்தியா இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 173 ரன்கள் எடுத்தது.
இலங்கை அணி 174 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது. இறுதி ஓவரில் 6 பந்துகளுக்கு 7 ரன்கள் தேவை என்ற நிலையில் இலங்கை அணி இலக்கை எட்டி 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
cricwire
இலங்கை அணி ஆப்கானிஸ்தான், இந்தியாவை வீழ்த்தியதன் மூலம் ஆசிய கோப்பை இறுதி போட்டிக்கு முன்னேறி உள்ளது தொடர் தோல்விகள் மூலம் இந்திய அணி தொடரில் இருந்து வெளியேறுவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது.
இந்த வெற்றி குறித்து இலங்கை ஜாம்பவான் மஹேலா ஜெயவர்தனே டுவிட்டரில், சிறப்பான வெற்றி பாய்ஸ்! வீரர்களின் அணுகுமுறை புத்திசாலித்தனமாக இருந்தது. ஒரு போதும் விட்டு விடாதீர்கள். தொடர்ந்து முன்னேறுங்கள் என பதிவிட்டு உற்சாகமூட்டியுள்ளார்.
Great win boys!!! Attitude was brilliant. Never gave up… keep it going ? @OfficialSLC #AsiaCup2022
— Mahela Jayawardena (@MahelaJay) September 6, 2022