ஆசிய கோப்பை! சிக்சர்களை பறக்கவிட்ட இலங்கை வீரர்கள்... அபார வெற்றி
ஆசிய கோப்பை சூப்பர் 4 போட்டியில் இலங்கை வெற்றி.
பாகிஸ்தான் அணியை 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அசத்தல்.
ஆசிய கோப்பை சூப்பர் 4 ஆட்டத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி இலங்கை அணி அபார வெற்றி பெற்றுள்ளது.
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. லீக் சுற்றுகள் முடிந்து, சூப்பர் 4 சுற்றுகள் நடந்து வரும் நிலையில் பாகிஸ்தான் - இலங்கை அணிகள் மோதின.
முதலில் பேட்டிங் ஆடிய பாகிஸ்தான் அணி 19.1 ஓவர்களில் 121 ரன்களுக்கு சுருண்டது. இதையடுத்து களமிறங்கிய இலங்கை அணியில், நிஷாங்க 55 ரன்களும், ராஜபக்ச 24 ரன்களும், ஷனகா 21 ரன்களும் அடித்தனர்.
இதையடுத்து இலங்கை அணி 17 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 124 ரன்கள் எடுத்து, 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இலங்கை அணி சார்பில் 5 சிக்சர்களை அந்த அணி வீரர்கள் பறக்கவிட்டனர். நாளை நடைபெறும் இறுதிப்போட்டியில் மீண்டும் இலங்கை - பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றது.
இறுதிப்போட்டிக்கு முன், பாகிஸ்தானுக்கு எதிரான இந்த வெற்றி இலங்கை அணிக்கு பெரும் உத்வேகத்தை கொடுத்துள்ளது.
Sri Lanka ace the dress rehearsal before the final to end the Super Four phase on a high ?#SLvPAK | #AsiaCup2022 | ? Scorecard: https://t.co/5cRoSjOfZG pic.twitter.com/SyjueGh0lk
— ICC (@ICC) September 9, 2022