ஆசிய சாம்பியன்ஸ் ஹாக்கி போட்டி! சீனாவை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி
சென்னையில் நடந்த ஆசிய சாம்பியன்ஸ் ஹாக்கி போட்டியில் சீன அணியை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி பெற்றது.
சென்னையில் ஆசிய சாம்பியன்ஸ் ஹாக்கி போட்டி
இந்திய மாநிலம் தமிழகத்தின் சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் மைதானத்தில் ஏழாவது ஆசிய ஹாக்கி சாம்பியன் டிராபி தொடர் நேற்று தொடங்கியது. இந்த தொடருக்காக சுமார் மூன்றரை கோடி ரூபாய் அளவில் ராதாகிருஷ்ணன் மைதானம் புனரமைக்கப்பட்டது.
இதில், இந்திய வீரர்கள் சுமித் 100-வது போட்டியிலும், அமித் 150-வது போட்டியிலும் களமிறங்கியதால், அவர்களுக்கு தமிழக அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின் மற்றும் சேகர் பாபு ஆகியோர் நினைவு பரிசுகளை வழங்கினர்.
பன்னாட்டு அளவில் மிகப்பெரிய முக்கியத்துவம் வாய்ந்த #AsianChampionshipTrophy ஹாக்கிப் போட்டியின் முதல் ஆட்டத்தை எழும்பூர் மேயர் ராதாகிருஷ்ணன் ஹாக்கி மைதானத்தில் இன்று தொடங்கி வைத்தோம். கொரியா - ஜப்பான் அணிகளுக்கு இடையேயான விறுவிறுப்பான முதல் போட்டியை கண்டு மகிழ்ந்தோம்.
— Udhay (@Udhaystalin) August 3, 2023
16… pic.twitter.com/h1USRjVIL9
இந்த போட்டியில், கொரியா, இந்தியா, பாகிஸ்தான், சீனா, மலேசியா, ஜப்பான் ஆகிய 6 அணிகள் விளையாடுகின்றன.
சீனாவை வீழ்த்திய இந்தியா
இந்நிலையில், நேற்று தொடங்கிய முதல் போட்டியில் இந்தியா மற்றும் சீன அணிகள் களமிறங்கின. இதில் இந்தியா சிறப்பாக விளையாடி அடுத்தடுத்த 7 கோல்களை பதிவு செய்தது. சீன அணி விளையாடி 2 கோல்களை மட்டும் எடுத்தது. இதனால் இந்தியா 7-2 என்ற கோல் கணக்கில் அபாரமாக வெற்றி பெற்றது.
இந்திய அணி சார்பில் ஹர்மன்ப்ரீத் மற்றும் வருண் குமார் தலா 2 கோல்களையும், சுக்ஜீத், மன்தீப் மற்றும் ஆகாஷ்தீப் தலா ஒரு கோலையும் பதிவு செய்தனர்.
இதனையடுத்து, இந்திய அணி வெள்ளிக்கிழமை ஜப்பான் உடன் மோதுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |