ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடருக்கான அட்டவணை வெளியானது
2023ம் ஆண்டுக்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
ஆகஸ்ட் 31ம் தேதி முதல் செப்டம்பர் 17ம் தேதிவரை ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெறுகிறது.
இந்தப் போட்டியில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான் மற்றும் நேபாளம் உள்ளிட்ட நாடுகள் பங்கேற்கின்றன.
இந்த 6 அணிகளும் 2 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு லீக் சுற்றில் விளையாடும், இதில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணி சூப்பர் ஃபோர் சுற்றுக்கு தகுதி பெறும்.
கடைசியில் இரு அணிகள் இறுதிப் போட்டியில் மோதும் என தெரிவிக்கப்பட்டது.
இதற்கு முன்பாகவே, பாகிஸ்தானில் போட்டி நடைபெற்றால் இந்தியா பங்கேற்காது என்றும், பொதுவான இடத்தில் பாகிஸ்தான்- இந்தியா போட்டியை நடத்திக் கொள்ளலாம் எனவும் பிசிசிஐ தெரிவித்தது.
ஆசிய கோப்பை தொடரில் பாகிஸ்தானுக்கு இந்திய அணி வரவில்லையென்றால், உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்க இந்தியாவுக்கு பாகிஸ்தான் அணியும் வராது என பாகிஸ்தான் கிரிக்கட் வாரியம் அறிவித்தது.
ஆனால் பிசிசிஐ தனது முடிவில் உறுதியாக இருந்ததால், இந்தியா- பாகிஸ்தான் மோதும் போட்டியில் இலங்கையில் நடைபெறும் என ஐ.பி.எல். தலைவர் அருண் துமால் தெரிவித்தார்.
- Asia Cup 2023.
— Johns. (@CricCrazyJohns) June 15, 2023
- August 31st to September 17th.
- 4 matches in Pakistan.
- 9 matches in Sri Lanka.
- Group stage then Super 4 then final. pic.twitter.com/OYlUzPkvAo
மேலும் அவர் கூறுகையில், ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடருக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது, பாகிஸ்தானில் லீக் ஆட்டத்தில் 4 ஆட்டங்கள் இருக்கும்.
பாகிஸ்தான் – நேபாள்
வங்கதேசம் – ஆப்கானிஸ்தான்
ஆப்கானிஸ்தான் – இலங்கை
இலங்கை – வங்கதேசம்
இலங்கையில் லீக் ஆட்டத்தில் 9 ஆட்டங்கள் இருக்கும், இங்கு தான் இந்தியா- பாகிஸ்தான் மோதும் போட்டிகள் நடைபெறும்.
இரு அணிகளும் இறுதிப் போட்டியில் விளையாடினால் மூன்றாவது ஆட்டம் நடக்கும் என தெரிவித்தார்.