Asian Games 2023: இந்திய அணிகள் நேரடியாக காலிறுதிக்கு தகுதி
சீனாவின் ஹாங்சோவில் நடைபெறவுள்ள 2023 ஆசிய விளையாட்டுப் போட்டியில் (Asian Games 2023) இந்திய ஆண்கள் மற்றும் பெண்கள் கிரிக்கெட் அணிகள் நேரடியாக காலிறுதிக்கு தகுதி பெறுவது உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்கு டி20 சர்வதேச போட்டி அந்தஸ்து வழங்கப்பட்ட பின்னர், ஐசிசி டி20 தரவரிசையில் ஜூன் 1-ஆம் திகதி வரையிலான பிராந்தியத்தில் முதல் 4 இடங்களைப் பிடித்த அணிகளுக்கு காலிறுதிப் போட்டிக்கான வாய்ப்புகள் வழங்கப்பட்ட நிலையில், இந்தியாவின் அணிகள் நேரடியாக காலிறுதிக்குத் தகுதி பெற்றன.
பாகிஸ்தான், இலங்கை மற்றும் பங்களாதேஷ் ஆகிய அணிகளும் தரவரிசை அடிப்படையில் நேரடியாக காலிறுதிக்கு தகுதி பெற்றுள்ளன.
ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பெண்கள் கிரிக்கெட் போட்டி செப்டம்பர் 19 முதல் 26 வரையிலும், ஆண்கள் கிரிக்கெட் செப்டம்பர் 28 முதல் அக்டோபர் 7 வரையிலும் நடைபெறும்.
ஆசிய விளையாட்டுப் போட்டியில் ஆண்கள் கிரிக்கெட் பிரிவில் 18 அணிகளும், பெண்கள் கிரிக்கெட் பிரிவில் 14 அணிகளும் பங்கேற்கின்றன.
ஆசிய விளையாட்டுப் போட்டிகள் ஹாங்சோவில் உள்ள ஜெஜியாங் தொழில்நுட்ப பல்கலைக்கழக கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது.
செப்டம்பர் 22-ஆம் திகதி நடைபெறும் காலிறுதிப் போட்டியில் இந்தியப் பெண்கள் மோத உள்ளனர். அரையிறுதிக்கு தகுதி பெற்றால், செப்டம்பர் 25-ம் திகதி அரையிறுதி போட்டி நடைபெறும். தங்கப் பதக்கப் போட்டியும், வெண்கலப் பதக்கப் போட்டியும் செப்டம்பர் 26-ஆம் திகதி நடைபெறும்.
முன்னதாக, வங்கதேசத்தில் நடந்த ஒருநாள் போட்டியின் போது நடுவர்களை வசைபாடியதற்காக இரண்டு போட்டிகளில் விளையாட தடை விதிக்கப்பட்ட ஹர்மன்பிரீத் கவுர், இந்தியா இறுதிப் போட்டிக்கு வந்தால் மட்டுமே ஆசிய விளையாட்டுப் போட்டியில் விளையாட முடியும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |
Asian Games 2023, Cricket matches in Asian Games 2023, Indian teams qualify straight for the quarterfinals, Harmanpreet Kaur, Asian Games 2023 in Hangzhou, China, direct quarter-finals