49 வயதில் மிரட்டிய திலகரத்னே தில்ஷன்: சுருண்ட பாகிஸ்தான் பாந்தர்ஸ்..ஆசியன் ஸ்டார்ஸ் வெற்றி
ஆசியன் லெஜெண்ட்ஸ் லீக் போட்டியில், ஆசியன் ஸ்டார்ஸ் அணி 85 ஓட்டங்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் பாந்தர்ஸை வீழ்த்தியது.
தேவேந்திர சிங் விளாசல்
லூஸாகாவில் நடந்த ஆசியன் லெஜெண்ட்ஸ் லீக் போட்டியில், ஆசியன் ஸ்டார்ஸ் மற்றும் பாகிஸ்தான் பாந்தர்ஸ் அணிகள் மோதின.
The Asian Stars have posted a formidable 186/6 in 20 overs! 💥
— Asian Legends League (@allt20official) July 31, 2026
⭐ Devendra Singh stole the show with a blazing 58 off 21 balls*, while Sandeep Singh added a valuable 33.
🎯 Target: Pakistan Panthers need 187 runs to secure the win.#AsianLegendsLeague #ALLT20 #CricketLegends pic.twitter.com/G2cdQFgwN3
முதலில் ஆடிய ஆசியன் ஸ்டார்ஸ் அணி 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 186 ஓட்டங்கள் குவித்தது.
தேவேந்திர சிங் 21 பந்துகளில் 5 சிக்ஸர்கள், 5 பவுண்டரிகளுடன் 58 ஓட்டங்களும், சந்தீப் சிங் 33 ஓட்டங்களும், ராஜீவ் ரிஷி 26 ஓட்டங்களும் விளாசினர்.
FIFTY in just 21 balls. 💥
— Asian Legends League (@allt20official) July 31, 2026
Devendra Singh stayed not out on 58 and took the game away.
Pure dominance from start to finish.
Drop a 👏 if that knock gave you goosebumps!#halfcentury #CricketLovers #T20Cricket #CricketLegends #t20 pic.twitter.com/XmpITCpr0p
தில்ஷன் ஆட்டநாயகன்
பின்னர் ஆடிய பாகிஸ்தான் பாந்தர்ஸ் அணி 20 ஓவர்களில் 101 ஓட்டங்களுக்கு சுருண்டது. இதன்மூலம் ஆசியன் ஸ்டார்ஸ் 85 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
அதிகபட்சமாக யாசிர் ஷா 34 ஓட்டங்களும், மொஹம்மது இர்பான் 30 ஓட்டங்களும் எடுத்தனர்.
திலகரத்னே தில்ஷன் 3 விக்கெட்டுகளும், மெஹ்ரான் கான் 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர். தில்ஷன் ஆட்டநாயகன் விருது பெற்றார்.
That's how you finish in style! 🔥
— Asian Legends League (@allt20official) July 31, 2026
Asian Stars beat Pakistan Panthers by 85 runs. 🏏
Complete dominance with bat and ball to seal a big win.
What did you think of the performance? Drop your reaction below! 👇#AsianLegendsLeague #ALLT20 #CricketLegends #T20Cricket pic.twitter.com/ZpXKj42qxB
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |