களத்தில் பேட்டால் அடிக்க சென்ற வீரர்! பாகிஸ்தான் போட்டியில் பரபரப்பு வீடியோ
ஆப்கானிஸ்தான் வீரரை பாகிஸ்தானின் ஆசிப் அலி பேட்டால் அடிக்க சென்றதால் பரபரப்பு
இரண்டு வீரர்களையும் சமாதானப்படுத்தி அனுப்பிய பாகிஸ்தான் வீரர் பாபர் அசாம்
பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டியில் இரு அணி வீரர்கள் ஒருவரை ஒருவர் திட்டிக் கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஆசியக் கோப்பை தொடரின் நேற்றைய போட்டியில் பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. ஷார்ஜாவில் நடந்த இந்தப் போட்டியில் முதலில் ஆடிய ஆப்கானிஸ்தான் 6 விக்கெட் இழப்புக்கு 129 ஓட்டங்கள் எடுத்தது.
அதனைத் தொடர்ந்து பாகிஸ்தான் களமிறங்கியது. அந்த அணியில் கேப்டன் பாபர் அசாம் முதல் பந்திலேயே ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தார். தொடக்க வீரர்கள் சொதப்பினாலும் இப்திகார் 30 ஓட்டங்களும், ஷதாப் கான் 36 ஓட்டங்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.
This bowler, who's name is not even known my many cricket fans misbehaved first. He should be banned not Asif Ali.#BanAsifAli pic.twitter.com/0wZIs888SR
— Arqam (@arrqamm) September 8, 2022
PC: Getty Images
அதன் பின்னர் வந்த வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்த நிலையில், ஆசிப் அலி அதிரடி காட்டினார். அவர் 19வது ஓவரில் ஒரு சிக்ஸர் அடித்ததும், எதிரணி பந்துவீச்சாளர் பரீத் அகமதை முறைத்து பார்த்தார். பதிலுக்கு மாலிக்கும் முறைத்து பார்த்தார். ஆனால் அடுத்த பந்திலேயே ஆசிப் அலி ஆட்டமிழந்தார். முன்னதாக ஆசிப் அலி முகத்திற்கு முன்பு கையை நீட்டி பரீத் அகமது திமிராக நடந்துகொண்டுள்ளார்.
PC: Getty Images
மேலும், ஆசிப் அலி திரும்பி செல்லும்போது அவரின் முதுகில் முட்டுவது போல செய்துள்ளார். இதனால் கோபமடைந்த ஆசிப் அலி பேட்டை தூக்கிக்கொண்டு அவரை தாக்குவது போல் சென்றார். உடனடியாக ஆப்கானிஸ்தான் வீரர்கள் இருவரையும் சமாதானம் செய்தனர்.
இந்த சம்பவத்தால் மைதானத்தில் சற்று பரபரப்பு ஏற்பட்டது.