வேறு பெண்ணுடன் தொடர்பு: கணவரை விவாகரத்து செய்கிறார் நடிகை அசின்?
நடிகை அசின் தன்னுடைய கணவர் ராகுல் சர்மாவை விவாகரத்து செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகைகளில் முக்கியமானவர் நடிகை அசின், எம் குமரன் அன் ஆப் மகாலட்சுமி படத்தின் மூலம் தமிழ் திரையுலகுக்குள் காலடி எடுத்து வைத்தார்.
முதல் படமே அசினுக்கு நல்ல பெயரை எடுத்துக் கொடுக்க அடுத்தடுத்து முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்தார்.
தமிழ் சினிமா மட்டுமின்றி, தெலுங்கு மலையாளம் என தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக வலம்வந்த அசின், பாலிவுட் பக்கம் தாவினார்.
ஹவுஸ்புல் படத்தில் அக்ஷய் குமாருடன் இணைந்து நடித்த போது, தொழிலதிபர் ராகுல் சர்மாவின் நட்பு கிடைத்தது.
இருவரும் நண்பர்களாக பழகி வந்த நிலையில், ஒருகட்டத்தில் காதலாக மாற 2016ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர்.
திருமணத்துக்கு பின்னர் நடிப்புக்கு முழுக்கு போட்டுவிட்டு ஒதுங்கிக்கொண்ட அசின்- ராகுல் தம்பதிக்கு 2017ம் ஆண்டு அரின் என்ற அழகான பெண் குழந்தை பிறந்தது.
இந்நிலையில் திருமணமாகி 7 ஆண்டுகள் கழித்து, கணவரை விவாகரத்து செய்யவுள்ளார் நடிகை அசின்.
இதனை உறுதிப்படுத்தும் விதமாக கணவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை சமூகவலைத்தளங்களில் இருந்து நீக்கிவிட்டார் அசின்.
வேறு ஒரு பெண்ணுடன் ராகுல் சர்மாவுக்கு தொடர்பு இருப்பதாகவும், பலமுறை அசின் கண்டித்தும் கேட்காததால் இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிகிறது.
அசின் தற்போது மகளுடன் அவரது அம்மா வீட்டில் வசித்து வருவதாகவும் கூறப்படுகிறது, எனினும் அசின்- ராகுல் தரப்பில் இருந்து தகவல்கள் வெளியானால் மட்டுமே உண்மை தெரியவரும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |